Header Ads



கொரோனா உடலை அடக்கலாம் என சமூக வலைத்தளங்களில், வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது - பிரதமர் அலுவலகம்


(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு குழுவினர் தங்களின் ஆய்வு அறிக்கைகளைப் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆகவே கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சினால் 11 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் மருத்துவ தரப்பினராலும் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டது.

இவ்விரு குழுவின் அறிக்கைகள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானவை வெகுவிரைவில் அறிக்கையின் உண்மை தன்மை பகிரங்கப்படுத்தப்படும். என பிரதமரின் ஊடகச் செயலாளர் குறிப்பிட்டார்.

5 comments:

  1. An important issue of SriLanka, the issue is raised all around the world.
    The report is ready in prime minister office.. but they say "Not yet discussed the report"

    Remember.. government said, they will not decide in this matter but expert committee dicision will be final. But now, when report did not satisfy certain racists.. they keep the report on the table, passing the time.

    Dear Muslims... Trust in Allah alone, raise your hands ask him to punish and destroy all these culprits.

    Also, we thank all those medical officers, for revealing the true status of this virus in regard to burial.

    Name of Srilanka is raised by these true people.. but hand full racists and opportunist politicians are pulling the respect of our country down by their ignorance and racism.

    ReplyDelete
  2. அந்த அறிக்கையை பிரதமர் அலுவலகம் பொய் ஆக்கிவிட்டதற்காக அறிய முடியகிறது.

    ReplyDelete
  3. வெளிவந்த செய்தி உண்மையாகவே இருந்தாலும் வன்போக்காளர்களை எவ்வாறு கையாளுவது எனும் தலையிடிக்கு மருந்து கண்டு பிடித்த பின்பே செய்தி வெளியிடப்படும்.

    ReplyDelete
  4. People know who is behind the scene. Even the medical report is under worst politics

    ReplyDelete
  5. சுகாதார அமைச்சு வேற மருத்துவ தரப்பு வேறயா? இப்பதான்டா விளங்குது நம் நாட்டு வைத்தியதுறையின் லட்சணம். அப்ப இறுதி முடிவு பிரதமரா.அவர் எப்போ வைரஸ் நிபுணர் ஆனார்.

    ReplyDelete

Powered by Blogger.