Header Ads



எமக்கு ஆதரவாக ரஸ்யாவும், சீனாவும் உள்ளன - எம்மீது தடைகளை விதிக்க முடியாது - சரத்வீரசேகர


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை சமர்ப்பித்துள்ள பதில் அறிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை உரிய பதில்களை வழங்கியுள்ளதால் சாதகமான பதில்கள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐநா தீர்மானத்திலிருந்து விலகும், அரசாங்கத்தின் முடிவு புத்திசாலித்தனமானது என தெரிவித்துள்ள அமைச்சர் தற்போது எங்களால் சுதந்திரமாக பதில்களை வழங்க முடியும் அதனையே நாங்கள் செய்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை எழுப்பிய கேள்விகளிற்கு முன்னைய அரசாங்கத்தினால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை என அருணவிற்கு தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் முடிவு எங்களுக்கு உதவியுள்ளது மனித உரிமை பேரவை தீர்மானங்களை கொண்டுவரலாம் ஆனால் நாங்கள் அதற்கு கட்டுப்படவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னர் இணை அனுசரணை வழங்கியதால் எங்களிற்கு பொறுப்பு இருந்தது தற்போது எங்களிற்கு அது இல்லை குற்றச்சாட்டு குறித்து நாங்கள் பதில் அளிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடைகள் ஏதாவது விதிக்கப்படுவது என்றால் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையே தடைகளை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைசசர் சரத்வீரசேகர எங்களிற்கு ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச்சபையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு சபையில் எங்களிற்கு சீனாவும் ரஸ்யாவும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.