ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மீறப்படுவதன் காரணமாக தமது கட்சி கலக்கமடைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கும் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறில்லாவிட்டால், தமது கட்சி கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்று ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
2 கருத்துரைகள்:
முதலில் கடுமையாக நடந்து கொண்டமையால் கட்சியின் விலாசம் தெரியாது உள்ளது. அ்டுத்தமுறை கடுமையாக நடந்து கொண்டால் கொழும்பிலுள்ள ஒரு ஊத்தவாளியில் அனைவரும் போய்ச் சேருவார்கள். அத்துடன் சுதந்திரக்கட்சியின் பேச்சி அடங்கிவிடும்.
Is this political party still ALIVE???
No UNP , No SLFP they already DEAD.
Post a comment