Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவது, பணம் சம்பாதிக்கும் மாபியா செயற்பாடாகியுள்ளது - இராஜாங்க அமைச்சர்


கொரோனா வைரசினால் வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தற்போது பணம் சம்பாதிக்கும் மாபியா செயற்பாடா மாறியுள்ளது என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களின் நிலைமையை குழுவொன்று தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றது என தெரிவித்துள்ள அவர், இந்த மாபியா வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிற்கு அனுப்புவது குறித்தே கவனம் செலுத்துகின்றது, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்புவது குறித்து கவனம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக பாடுபட்ட இத்தாலி, பிரான்ஸ், குவைத் உட்பட பல நாடுகளில் உள்ளவர்களை அரசாங்கம் அலட்சியம் செய்யக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது பிசிஆர் சோதனைகள் மூலம் தெரியவந்தாலும், அவர்கள் சிலநாட்களிற்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் விமானக்கட்டணங்களிற்காக இரண்டு லட்சம் ரூபாயை செலுத்துகின்றனர், இலங்கைக்கு அழைத்துச்செல்லப்படுபவர்களின் பட்டியலில் பெயரை பதிவு செய்வதற்காக 20.000 ரூபாய் இலஞ்சமாக வழங்கவேண்டியுள்ளது, ஹோட்டல்களிற்கு 15,000 ரூபாய் செலவிடவேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Maphiya in your own government, not from outside or from foreign countries....

    ReplyDelete

Powered by Blogger.