Header Ads



அமெரிக்காவின் புதிய அதிபருக்கும், உப அதிபருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் வாழ்த்து


அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தமது வாழ்த்து செய்தியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.