Header Ads



முன்னாள் ஜனாதிபதிக்கு, பேராசிரியர் பீரிசின் பதிலடி


நாட்டில் கட்சி ஒன்றுக்குள் இருக்கும் பிரச்சினையை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் கலந்துரையாடுவது எந்த வகையிலும் நன்மையானதாக இருக்காது என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம், -04- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் - இது குறித்து தாம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அடிப்படையாகக் கொண்ட கூட்டணியின் தலைவர் ஒருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு போட்டியளித்து, கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசியுள்ளார்.

எம்முடன் இணைந்து பணியாற்றும் கட்சியுடன் இருக்கும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் எப்போதும் வெளிநாட்டு ஊடகங்களில் விமர்சித்தது கிடையாது என்றார்.

இதேவேளை - அண்மையில் இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்த முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, 2020 ஆம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.