Header Ads

சுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...!

(யாஸிர் லஹீர்)

"சிரச லக்ஷபதி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்றா முனவ்வருக்கு லட்சோபலட்ச  நல்வாழ்த்துக்கள்.

தன் இலட்சிய கனவுகளை வறுமையின் இரும்புப் பிடி காவு கொள்ளாமல் கர்ஜிக்கும் சிங்கப் பெண்ணை தொலைக்காட்சி திரையில் காண சந்தோசமாய் இருந்தது.

இலட்சிய வேட்கை கொண்ட வேங்கையான இவரிடத்தில், விவேகம் கலந்த வேகமும் கூடவே  இருந்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.

எம் சமூகம் மீது குறி வைத்து எறி கணைகள் அடுக்கடுக்காய் எறியப்படும் இத்தருணத்தில், சின்ன இடைவெளியின் ஆறுதல் கேடயமாக  திடீரெனத் தோன்றிய இவரது பாத்திரம், பிற இன மனங்களை கவர்ந்திழுக்க புது மூலோபாயத்தின்  புதுப் பக்கங்களை சொல்லித்தருகிறது. 

எம் சமூகக் குரல் எதிரொலிக்க எமக்கான தனி ஊடகம் எமக்கு இல்லையே என பல தசாப்தங்களாக ஒப்பாரி வைக்கும் எமக்கு , 

கிடைக்கும் வாய்ப்புக்களை எம் குரல் எட்ட எப்படி பயன்படுத்துவது என சொல்லி த் தந்த இந்த சுட்டி சுக்றாவுக்கு ஆயிரம் சுகூர்கள். 

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, பல் கோண குறுக்கு விசாரணையில் திக்கு முக்காடும் எம் சமூகத்தின் புறத் தோற்றத்தை சரி செய்ய இவர் போன்ற பலர் பல துறைகளிலும் உருவாக்கப்படல் வேண்டும். 

 மொழிப் புலமையின்மை, அளவுக்கு மிஞ்சிய இறுக்கமான கலாசார வேலி, சுய தனிமைப்படுத்தல், பிற சமூகத்தவர் தொடர்பான பிழையான கண்ணோட்டம்.... என பல விடயங்கள் எம்மை "தொடர்பு அறுந்த"  சமூகமாக்கிவிட்டன. இவை ஏனைய சமூகத்தினரிலிருந்து பல மைல்கள் எம்மை தூரப்படுத்தி விட்டன. 

பிழையான பல பழைமைகளை "பழையன கழிதலாகக்" கொண்டு, 

சமூக நலன் சார்ந்த பல புதிய அணுகு முறைகளை "பதியன புகுதலாகக்" காணும் பக்குவம் எம் சமூகத்திற்கு இனியாவது வரவேண்டும்.

இன நல்லிணக்கத்திற்கும், இன இடைவெளி குறைத்து நல்லெண்ணம் வளர்க்கவும்  பல மணி நேர வரன்ட  உபன்னியாசங்களை விடவும், வீரியமும் தாக்கமும் கொண்ட புது யுக்திகள் விரை பலன் தரும் என்பதற்கு சுக்றாவின் புத்தியும் யுக்தியும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. 

பீதி நிலை பின்புலத்தில், நல்லிணக்கமென வெற்றுக் கோஷமெழுப்பி, அனைத்தையும் இழந்து பேரினவாதத்தில் சரணாகதி ஆகுவதை விடுத்து, எமது தனித்துவ அடையாளங்களுடன் சரிசமன் நிலையில் அறிவு ரீதியாகவும் விளங்கும் பாஷையிலும் 

எமது பக்க கருத்துக்களை சொல்லும் போது, அவை எல்லைகளைக் கடந்து உள்ளங்களை சென்றடையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இத்தகையவர்கள் மென்மேலும் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்... வளப்படுத்தவும் வழிநடத்தப்படவும் வேண்டும். 

சிறகடித்து ஆகாய உச்சம் தொட கனவு காணும் சுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கும் எமக்குள் இருக்கும் மாற்றுக் கிரகவாசிகளிடத்தில் சில செல்லமான வேண்டுதல்கள். 

 முல்லாக்களே ¡, 

கலாசார காவல் குஞ்சுகளே ¡

இடத்திற்கு இடம் நிறம் மாற்றிக் கொள்ளும் நிற மாற்றிகளே ¡

# உங்கள் வரன்ட குருட்டு விமர்சனங்களால் இந்த பிஞ்சு மொட்டுக்களை சிதைக்காதீர். 

# உங்கள் தாலிபானிச கெடுபிடிகளால் மலாலாக்களை உருவாக்காதீர்கள். 

# கால மாற்றத்தில் பட்டுப் போய் துருப்பிடித்த உங்கள் வரட்டு அணுகு முறைகளால் எதிர்கால ஆளுமைகள் காயப்படாமல் இருக்கட்டும். 

# கிணற்றுத் தவளைகளாக இன்னும் குந்தியிருக்காது, புது மாற்றத்திற்குள் உங்களை மாற்றிக் கொ‌ள்ளு‌ங்க‌ள்.. மற்றவர்களையும் மாற விடுங்கள். 

# சுக்றாக்களுக்கு "ஒன்லைன் எட்வைஸ் " வழங்கி உங்கள் கால நேரத்தை வீணடிக்காமல், அவர்கள் படித்து முடித்த பல நூறு நூல்களில் ஒன்றையாவது படித்து, மங்கிய புத்தியை தீட்டப்பாருங்கள். 

#  மஞ்சளித்துப் போன உங்கள் பழைய பிக்ஹு புத்தகங்களை தூசு தட்டி, புரட்டிப்பார்த்து பத்வாக்களை பரீட்சித்துப்பார்க்க இந்த சுக்றாக்களை தேடாதீர்கள். 

# இந்த நடமாடும் நூலகங்களை உங்கள் காழ்புணர்ச்சிக் கரையான்கள் அரிக்காதிருக்கட்டும். 

#  இனவாதிகளின் வீர கோஷ வார்த்தை "தேசபக்தி". 

தேச எல்லைகளைக் கடந்து பூகோள ரீதியாய் சிந்தித்து செயற்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமென, ஆதர்சி கிளாக்கின் நூல் ஊடாக ஆரூடம் கூறி, இனவாதிகளை திக்குமுக்காடச் செய்த இவரது சாணக்கியம் அசாதாரணமானது. 

இஸ்லாம் கூறும் றஹ்மதன் லில் ஆலமீன் (அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை) சர்வதேசப் பார்வையை மாற்று வழியில் விளக்கிய இந்த திறனாளிகளை, 

உங்கள் உடைந்த கலாசார தராசில் வைத்து குறைத்து அளவிடாதீர்கள். 

புதிதாய் சிந்திப்போம்... சிந்திப்போரை ஊக்கப்படுத்துவோம்.

புது வழிகள் கொண்டு, திசை மாறிய எம் பயணத்தை சரி திசை நோக்கி செலுத்த, புதுக் குருதி கொண்ட நவயுக ஆளுமைகள் மென்மேலும் பிறப்பெடுக்க வழியமைப்போம். 

19 comments:

  1. You foolish narrow minded thinker, You have a wrong foundation. Lack of upbringing. Why the heck are you bringing the Fiqh and kithab to this place? Remember, the problem is with you, Not with Shukra or others..

    ReplyDelete
  2. இந்த முற்போக்கு நவீனத்துவ நாதாரிகள் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே பல பிரச்சினைகள் அடங்கிவிடும். இப்படியான சமுதாயத்தை காட்டிக்கொடுக்கும் ஆக்கங்களை jaffna muslim இணையதளமும் வெளியீடுவது வேதனையானதே

    ReplyDelete
  3. இந்த மாணவிக்கு கிடைத்த பாராட்டுக் களைப் பார்த்த பின்தான் தெரிந்தது. பெரும்பான்மை இனவாதம் கதைப்பவர்கள் மிகச்சிலரே.இப்போது உள்ள சூழ்நிலையில் இவ்வாறான திறமைகள் காட்டப்படும் போது அது பெரும்பான்மையினாரால் மெச்சப்பட்டு ஒரு மாற்றம் வரக்கூடிய சாத்தியம் நிறையவே உண்டு.இது எம்சமுகம் பற்றிய நல்ல புரிதலை நிச்சயம் ஏற்படுத்தும். 2001/11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின் ஊடகங்கள் மிக தவறாக இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கினார்கள் என பரப்பின.அதை நம்பாத பொதுமக்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பற்றி அயல் முஸ்லிம்களுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவு 30000.(30) ஆயிரம் அமெரிக்க ஃமக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.மாஷா அல்லாஹ்.இது உண்மையில் 6 மாதத்துள் நடந்தது.இதை தேடி அறிய முடியும்.ஆகவே விமர்சனங்கள் தேவை இல்லை.அந்த விமர்சனங்கள் சொல்பவர்கள் எதுவும் சாதிக்காதவர்களே.நியாஸ் இப்றாஹிம்.

    ReplyDelete
  4. Good information and advice for some label Muslims ILUMINATY.

    ReplyDelete
  5. இல்ல, இல்ல நான் புடிச்ச மொசலுக்கு (முயல்) மூணு கால்தான். வேணும்னா வந்து பாருங்க. ஒடனே வாங்க. வந்து பாருங்க.

    ReplyDelete
  6. சபாஷ் சரியான விளக்கவுரை......எமது சமூகம் இன்னும் சிந்திக்க தூண்டப்படாமல் இருபதுக்கு சிட்ப தேர்ச்சி பெற்ற கலாசார முல்லாக்கலின் விமர்சனமும் பரந்து சிந்திக்க தெரியாத குடும்ப அங்கதத்தினர்களுமே மிக முக்கிய காரணம்..மகளே உன்னை பின்பற்றி பல ஆயிரம் மகள் மார்கள் எம் சமூகத்தில உருவாக பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  7. Please can any one give this knowledgeable writer contact number

    ReplyDelete
  8. ஆற்றல்மிக்க மாணவி சுகிறாவுக்கு அன்பான வணக்கங்கள். முஸ்லிம்கள் சுக்றா போன்ற எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களை போற்றி பாதுகாக்கவேண்டும். முஸ்லிம்க மிக மோசமாகத் தனிமைப் படுகிற சூழலில் வெளிவருகிற இக்கட்டுரை மிக முக்கியமானதாகும். சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த சிங்கள சமூகமுமே பாரம்பரிய முஸ்லிம்களோடுதான் நமக்கு பேச்சு என உரத்துச் சொல்லிவருகின்றார்கள். ஈஸ்ட்டர் தாக்குதலின்பின்னர் கிழக்கு மாகாண தமிழர்கள் மத்தியிலும் சூபிகளோடு மட்டுமே நல்லுறவோடு வாழமுடிய்ம் என்கிறார்கள். ஏனைய சித்தாந்த தீவிர வாதிகளோடு பேச முடியாது என்கிறார்கள். இத்தகைய இருண்ட சூழலில் ஒளி பாச்சுகிற கட்டுரையாளருக்கு என் அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  9. முல்லாக்களைக் கேவலப்படுத்தும் கல்லாதார்

    அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

    முல்லா என்ற சொற்பதம் அல் குர்ஆனையும் ஹதீஸையும் ஏனைய சமய சட்டங்களையும் கற்று பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்து சன்மார்க்கத்தைப் பாதுகாக்கும், தீன் பணிபுரியும் ஆலிம்களையே அது குறிக்கும்.

    இச்சொற்பதம் ஈரான், இராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிள் பயன்பாட்டில் உள்ளது.

    அல்லாமா முல்லா அலீ காரி போன்ற மாமேதைகள் இப்பதம் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர்.

    ஆலிம்களையும் கற்றோரையும் கேவலப்படுத்தும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் பெருகிவரும் இக்காலத்தில், முல்லாக்கள் என்று சொல்லின் அர்த்தமே புரியாத புத்திசாலிகள் சமயம்கற்ற சன்மார்க்க அறிஞர்களை குற்றவாலிக் கூண்டில் நிறுத்தி, சமூகத்தின் புறத்தோற்றத்தை சரி செய்யப் போகிறார்களாம்.

    பாவம், உளவியாதியின் காரணமாய் உளத்தோற்றத்தை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் இப்போது புறத்தோற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

    இஸ்லாமிய சட்டக்கலையை பிக்ஹுக் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. பிக்ஹுக் கலையின் பெறுமதி புரியாதவர்கள், புதியன புகுத்தி பழையன கழிக்க முற்பட்டுள்ளனர்.

    புதியன எதில் புகுத்துவது? அல் குர்ஆனிலா? அல் ஹதீஸிலா? பிக்ஹு சட்டத்திலா? முக்காலத்துக்கும் முகம்கொடுக்கும் ஷரீஆவைக் கொண்ட சமூகம் எதனைப் புகுத்தவும் எதனைக் கழிக்கவும் முயற்சிக்கின்ற?

    ஒரு புதிய பிக்ஹினை உருவாக்கி புதியன புகுத்தவா? அல்லது பழைய பிக்ஹின் மீது இருக்கும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தகர்ப்பதா இதன் அர்த்தம?

    ஆலிம்கள் மீது இருக்கும் இவர்களது இறுக்கமான வரண்ட பார்வையின் காரணமாக, நல்லுபன்னியாசங்கள் கூட வரண்டவையாகவும், அவர்களை மாற்றுக் கிரகவாசிகளாகவும்
    நிறம்மாற்றிகளாகவும் வரண்ட குருட்டு விமர்சகர்களாகவும் தாலிபானிஸ கெடுபிடிக்காரர்களாகவும், துருப்பிடித்த வரட்டு அணுகுமுறையாளர்களாகவும் கினற்றுத் தவளைகளாகவும் மங்கிய புதிதிக்காரர்களாகவும் காழ்புணர்ச்சி கரையான்கள் எனவும் ஏன் மஞ்சளித்துப் போன பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று ஒட்டுமொத்த ஷரீஆவையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறியிருக்கின்றனர்.

    இவர்களது மேற்சொல்லப்பட்ட நச்சுக்கருத்துக்களை விடவும் மோசமாகவா எமது ஆலிம்களும் பிக்ஹுத் துறையும் உள்ளங்களையும் உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டன?

    ரஹ்மதன் லில் ஆலமீன் என்ற பார்வை இருந்திருப்பின் இப்படியான வன்மம் வெளிப்பட்டிராது.

    உடைந்த மேற்கத்திய சிந்தனைச் தராசில் வைத்து, வக்கிர பார்வையைக் கொண்டு அளவிட்டதன் விபரீதமும் விளைவுமே இதுவாகும்.

    புதுவழிகள் என்ற போர்வையில் சமூகத்திசையை மாற்றியமைக்கப் புறப்பட்டுள்ள நவீனத்துவப் போராளிகளின் திசையை நன்றாக அவதானித்து, வசைபாடலையும் அதற்கான இசைதேடலையும் புதுக்குருதி கொண்ட நவயுக ஆளுமைகளும் புத்திஜீவிகளும் நிதானமாக சமூகத்தை வழிநடாத் எத்தனிக்க கடமைப்பட்டுள்ளனர்.

    காழ்ப்புணர்ச்சியை கட்டுப்படுத்தி கருத்துச் சொல்வதும் அர்த்தம் கற்பிப்பதும் ஒருவரை ஒருவர் உளப்பூர்வமாகப் புரிந்துகொள்வதுமே காலத்தின் தேவையாகும்.

    அதற்காக ஆலிம்களையும் முல்லாக்களையும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவது விடிவிற்கான விழகள் அல்ல.

    ReplyDelete
  10. தொடர்ந்தும் இளம் ஆளுமைகளை ஊக்குவிக்க வேண்டும்

    ReplyDelete
  11. துணிவாக இவ்வாறு பேசுவோரை இஸ்லாத்தில் இல்லாதவர்கள் என்று தீர்ப்பு வழங்கும் இச்சமூகத்தில் தங்களின் துணிவான கட்டுரைக்கு பல கோடி நன்றிகள் யாஸிர் லஹிர். முன்னேற்றங்களைத் தடுக்கும் விசாலமான சிந்தனைக்கு முட்டுக்கட்டை போடும் எந்தக் கேட்பாடுகளும் காலப் போக்கில் அழிந்து போய்விடும்.முட்டுக்ககட்டைகளை முட்டி மோதி இடித்து தள்ளிக்கொண்டு செல்லுவோம். ஆண் பெண் வேறுபாடின்றி மண்ணில் (கலாசாரத்தில்)காலூன்றியவாறு விண்ணைத்தொடப் புறப்படுவோம். மண்ணைத் தோண்டிக் கொண்டு இருப்போரை அவ்வாறே விட்டுவிடுவோம். கப்று தோண்டும் வேலை மீதப்படும். ஆதர்சி கிளாக்கின் தத்துவங்களைக்கூறி அவரைத் தேசபிமானி என்று கூறுவது தவறு அவர் ஒரு உலகபிமானி என்று சொன்ன தர்க்கம் நடுவரைத் தூக்கிவாரிப் போட்டது. தேசபிமானம் என்ற பெயரில் இனவாத கருத்துக்களை விதைக்கும் சிரச TV க்கும் பாடம் புகட்டியிருக்கிறார் அந்தச் சிங்கப்பெண்.

    ReplyDelete
  12. Very good and needful article...

    ReplyDelete
  13. Jaffna Muslim இலேயே உங்களுக்கான பதில்.ஆமோதிக்கிறேன்

    அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -
    முல்லா என்ற சொற்பதம் அல் குர்ஆனையும் ஹதீஸையும் ஏனைய சமய சட்டங்களையும் கற்று பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்து சன்மார்க்கத்தைப் பாதுகாக்கும், தீன் பணிபுரியும் ஆலிம்களையே அது குறிக்கும்.

    இச்சொற்பதம் ஈரான், இராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிள் பயன்பாட்டில் உள்ளது.

    அல்லாமா முல்லா அலீ காரி போன்ற மாமேதைகள் இப்பதம் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர்.

    ஆலிம்களையும் கற்றோரையும் கேவலப்படுத்தும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் பெருகிவரும் இக்காலத்தில், முல்லாக்கள் என்று சொல்லின் அர்த்தமே புரியாத புத்திசாலிகள் சமயம்கற்ற சன்மார்க்க அறிஞர்களை குற்றவாலிக் கூண்டில் நிறுத்தி, சமூகத்தின் புறத்தோற்றத்தை சரி செய்யப் போகிறார்களாம்.

    பாவம், உளவியாதியின் காரணமாய் உளத்தோற்றத்தை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் இப்போது புறத்தோற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

    இஸ்லாமிய சட்டக்கலையை பிக்ஹுக் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. பிக்ஹுக் கலையின் பெறுமதி புரியாதவர்கள், புதியன புகுத்தி பழையன கழிக்க முற்பட்டுள்ளனர்.

    புதியன எதில் புகுத்துவது? அல் குர்ஆனிலா? அல் ஹதீஸிலா? பிக்ஹு சட்டத்திலா? முக்காலத்துக்கும் முகம்கொடுக்கும் ஷரீஆவைக் கொண்ட சமூகம் எதனைப் புகுத்தவும் எதனைக் கழிக்கவும் முயற்சிக்கின்ற?

    ஒரு புதிய பிக்ஹினை உருவாக்கி புதியன புகுத்தவா? அல்லது பழைய பிக்ஹின் மீது இருக்கும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தகர்ப்பதா இதன் அர்த்தம?

    ஆலிம்கள் மீது இருக்கும் இவர்களது இறுக்கமான வரண்ட பார்வையின் காரணமாக, நல்லுபன்னியாசங்கள் கூட வரண்டவையாகவும், அவர்களை மாற்றுக் கிரகவாசிகளாகவும்

    நிறம்மாற்றிகளாகவும் வரண்ட குருட்டு விமர்சகர்களாகவும் தாலிபானிஸ கெடுபிடிக்காரர்களாகவும், துருப்பிடித்த வரட்டு அணுகுமுறையாளர்களாகவும் கினற்றுத் தவளைகளாகவும் மங்கிய புதிதிக்காரர்களாகவும் காழ்புணர்ச்சி கரையான்கள் எனவும் ஏன் மஞ்சளித்துப் போன பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று ஒட்டுமொத்த ஷரீஆவையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறியிருக்கின்றனர்.

    இவர்களது மேற்சொல்லப்பட்ட நச்சுக்கருத்துக்களை விடவும் மோசமாகவா எமது ஆலிம்களும் பிக்ஹுத் துறையும் உள்ளங்களையும் உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டன?

    ரஹ்மதன் லில் ஆலமீன் என்ற பார்வை இருந்திருப்பின் இப்படியான வன்மம் வெளிப்பட்டிராது.

    உடைந்த மேற்கத்திய சிந்தனைச் தராசில் வைத்து, வக்கிர பார்வையைக் கொண்டு அளவிட்டதன் விபரீதமும் விளைவுமே இதுவாகும்.

    புதுவழிகள் என்ற போர்வையில் சமூகத்திசையை மாற்றியமைக்கப் புறப்பட்டுள்ள நவீனத்துவப் போராளிகளின் திசையை நன்றாக அவதானித்து, வசைபாடலையும் அதற்கான இசைதேடலையும் புதுக்குருதி கொண்ட நவயுக ஆளுமைகளும் புத்திஜீவிகளும் நிதானமாக சமூகத்தை வழிநடாத் எத்தனிக்க கடமைப்பட்டுள்ளனர்.

    காழ்ப்புணர்ச்சியை கட்டுப்படுத்தி கருத்துச் சொல்வதும் அர்த்தம் கற்பிப்பதும் ஒருவரை ஒருவர் உளப்பூர்வமாகப் புரிந்துகொள்வதுமே காலத்தின் தேவையாகும்.

    அதற்காக ஆலிம்களையும் முல்லாக்களையும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவது விடிவிற்கான விழகள் அல்ல.

    ReplyDelete
  14. சுக்ராவை வாழ்த்துகிறேன்.பாராட்டுகிறேன்.திறமை இன்னும் வளரப் பிரார்த்திக்கிறேன்.அதற்காக முல்லாக்களையும் ஆலிம்களையும் பிக்ஹ் கலையயும் குறைகாண முடியாது.
    இலங்கையில் இன ஐக்கியம் வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களை முஸ்லிகளே குறைகாண்பது வழக்கமாகிவிட்டது

    ReplyDelete
  15. Our country needs more Shukra Munavvars from all communities. Never look at negative and discouraging comments and criticisms made by some psychopaths. Such people are everywhere in the world. You don't need to convince them and it is not necessary either. You are an exemplary daughter. You can be a role model to our children. You can see how much our Sinhala brothers and sisters (including some ven. monks) are encouraging you. You have won the hearts and minds of millions of people. Never give up. Everything is possible. I know your family background. When you spoke about the pride of your hometown (Katugoda)
    I am highly impressed by your knowledge and the way you presented. I am certain that you will achieve your goals without much difficulties in sha Allah.

    I wish you all the success in your future endeavors. May Allah the almighty bless you forever.

    ReplyDelete
  16. Our country needs more Shukra Munavvars from all communities. Never look at negative and discouraging comments and criticisms made by some psychopaths. Such people are everywhere in the world. You don't need to convince them and it is not necessary either. You are an exemplary daughter. You can be a role model to our children. You can see how much our Sinhala brothers and sisters (including some ven. monks) are encouraging you. You have won the hearts and minds of millions of people. Never give up. Everything is possible. I know your family background. When you spoke about the pride of your hometown (Katugoda)
    I am highly impressed by your knowledge and the way you presented. I am certain that you will achieve your goals without much difficulties in sha Allah.

    I wish you all the success in your future endeavors. May Allah the almighty bless you forever.

    ReplyDelete
  17. She should become another Dr. Zakir Naik. May almighty Allah bless and bolster her! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.