Header Ads



கொரோனா உடல்களை அகற்றும்போது, மத நம்பிக்கைக்கு மதிப்பளியுங்கள் – இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றம் நடவடிக்கைகளின் போது மதநம்பிக்கைகளை மதிக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான பணியகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலங்கையை மதநம்பிக்கையையும் கலாச்சாரங்கiயும் உள்வாங்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொவிட் 19 துயரம் பெருமளவு உயிர்களை பறித்துள்ளது, நாங்கள் இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில்மதநம்பிக்கைகளையும் கலாச்சாரங்களையும் உள்வாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான பணியகம் இதன் மூலம் மக்கள் தங்கள் நேசத்திற்குரியவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இறுதிமரியாதையை செலுத்தமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.