Header Ads



முஸ்லிம் திணைக்களம் மீது, சத்தார் விமர்சனம்


- சிமா -

முஸ்லிம் சமூகம் சார்ந்த அரச விவகாரங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்  சரியான முறையில் செயற்படாமையினால்  அப்பதவியில் இருந்த பணிப்பாளர் சுயமாக பதவி விலகிக் கொண்டமையினை அடுத்து அவ்விடத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் செய்ய வேண்டியுள்ளதுடன்,  இன்று திணைக்களத்தினால் குருநாகல் மாவட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கிடையில் நடைபெற இருந்த கூட்டம் இப்பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகளின் கோரிக்கைக்கு இணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக என்று பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளரும் பிரதமரின் குருநாகல் மாவட்ட இணைப்பதிகாரியுமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 

சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கெட்டான காலகட்டத்தில் முஸ்லிம்களுடைய அரச விவகாரங்களை சரியான முறையில் முன்னெடுக்கப்பட வில்லை என்ற விமர்சனம் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கினறன. முஸ்லிம் சமய விவகாரங்களை மற்றும் பள்ளிவாசல்கள் பதிவுகள், அரபுக் கல்லூரி விவகாரம், வக்பு சபை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஒழுங்காகவும் சீராகவும் முன்னெடுக்கப்படவில்லை.  பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் கீழ் உள்ள இத்திணைக்களத்தை அவருடைய காலத்தில் பலப்படுத்துவதே இன்றுள்ள தேவையாகும்.

இப்பதவியில் இருப்பவர் ஒரு  இயக்கம் சார்ந்தவோ ஒரு தாரிக்கா சார்ந்தவரோ இருக்கக் கூடாது. சம நிலையில் தன்மையுடன் சேவையாற்றக் கூடியவர் ஒருவர் இருத்தல் வேண்டும். அரசியல் சார்ந்தவர் அல்லது ஒரு பக்கம் சார்ந்தவர் இப்பதவியில் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்படும் ஒரு தரப்பினர் அவரை ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. எனவே இவ்விடத்தில் இன்றைய அவசரத் தேவைகளை சரியான முறையில் சமநிலையோடு அணுகி சேவையாற்றக் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. 

ஒரு பக்க சார்பாக செயற்படும் பணிப்பாளர் ஒருவர் இப்பதவியில் இருந்தால் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்காமல் தனிப்பட்ட செல்வாக்குள்ள குழுவினரின் வழிநடத்தலில் செயற்படும் மிக மோசமான நிலைமையே  தொடர்ந்து ஏற்படும். இப்படிப்பட்டவர்கள்  இப்பதவியில் இருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மட்டார்கள். 

எனவே சுயமாக பதவி விலகிய ஒருவர், மீண்டும் முஸ்லிம் விவகார திணைக்களத்தின்  நடவடிக்கைளில் தலையைப் போடுவது பொருத்த மற்ற செயற்பாடாகும். முதலாம் திகதி பதவி விலகியவர் இன்று 15-01-202 குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்  நம்பிக்கையாளர்களுக்கான கூட்டத்தை நடத்த முன்வந்தமையினை இம்மாவட்ட பல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இது தொடர்பில் என்னிடம் முன் வைத்த கோரிக்கை இணங்க இன்று இக்கூட்டத்தை  தடுத்து நிறுத்த வேண்டியுள்ளதாக அவர்  தொவித்தார்.

அது மட்டுமல்ல அவர் மேலும் முயற்சி செய்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஊடகவும் நடத்த முன்வந்த போதிலும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க அதனை தடுத்து நிறுத்த வேண்டிய  துரதிர்~டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே இத்திணைக்களத்தின் மூலம் முஸ்லிம்களுடைய  சமய காலாசார நிகழ்காலத் திட்டங்களை  சிறந்த  முறையில்  முன்னெடுத்துச் செல்வதற்கான  ஒரு முறையான திட்டம் இத்திணைக்களத்தினால் இது வரையிலும் முன்னெடுக்கப்படவில்லை.

முஸ்லிம்கள்  ஒற்றுமையிழந்து அரசியல் ரீதியாகவும் இயக்க ரீதியாக பல்வேறு கோணங்களில் பிரிந்து பலமிழந்து இருக்கின்றனர். இவற்றை ஒருமுகப்படுத்தி கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு இருக்கிறது. 

இத்திணைக்களம் எமது மஹிந்த ராஜபக்~வின் காலத்தில் மேலும் மேலும் வளர வேண்டும்  என்பது மாத்திரமன்று அதுவோர் இன்றைய முஸ்லி சமூகத்தின் கட்டாய  தேவை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனைய சமய கலாசார திணைக்களத்துடன் சேர்ந்து முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்  இணைந்து தான் ஆற்றி வரும் பணியை மேலும் ஆற்ற வேண்டும். 

பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செலாளர் என்ற வகையில் எனக்கும் பொறுப்புக் கூறல் என்ற விடயம் தங்கியிருக்கிறது. இத்திணைக்களம் வெற்றிகரமான சமூக செயற்பாட்டுக்கான இடமாக மட்டுமல்லாது முக்கியமாக எல்லாத் துறைகளிலும் முஸ்லிம்களை கட்டி எழுப்புகின்ற நிறுவனமாகவும் அமைய வேண்டும். இந்த சமநிலையைப் பேணுவதிலே இத்திணைக்களத்தின் எதிர்காலமும் முஸ்லிம்கள் அடையும் பயன்பாடும் உள்ளது  

இப்பணிப்பாளர் சில நல்ல முயற்சிகள் செய்தாலும் பொது மக்கள் ஏற்றுக் கொள்ளாமையினை  அடுத்து தாம் பதவி விலகினால் இன்னுமொருக்கு அவ்விடத்தை விட்டு கொடுத்துச்  செல்வதே  ஒரு படித்தவரின் ஒருவரின் நல்ல பண்பு. நாகரீகமும் ஆகும்.  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Why can't you take up that position and unite the community? Just curious to know.

    ReplyDelete

Powered by Blogger.