Header Ads



நினைவுத் தூபியை அகற்றியிருக்காவிட்டால், பொங்குதமிழ் தூபியும், மாவீரர் நினைவாலயமும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் - துணைவேந்தர்


மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்.பல்கலை துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்

யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்.

இதனை அகற்றத் தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பனவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

5 comments:

  1. Hello VC.
    I agree with you what you said. When we all are government servents, we have to do what the government asked to do. In the meantime, we have other side of our life. Being a tamil person, you should not agree to remove.
    This where we all make mistakes. We all minorities and work as real goverment servents (slave) to government. This is previuos experience too.
    But Sinhalese (most of them) are not like us. They do whatever they like and they get free ride. (No punishment for them)
    This is a classical example of One country and two rules.

    ReplyDelete
  2. 1976-1978 காலக்கட்டத்தில் நான் மாணவர்தலைவரக இருந்தேன். அப்பவிருந்தே யாழ் பல்கலைக்கழகம் அரச பயங்கரவாத நெருக்கடிகளுக்கு உள்ளே ஒரு பாலைவனச் சோலைபோலத்தான் இயங்கி வருகிறது. யுத்த காலத்தில் குறிப்பாக இறுதி யுத்தத்தின்போதும் பின்னரும் ஏற்பட்ட அரச இராணுவ அச்சுறுத்தல் நிலமையை ஒத்த நெருக்கடிகள் இன்றில்லை. அந்த பயங்கரமான காலங்களில் பதவியில் இருந்த துணைவேந்தர்கள் யாரும் இத்தகைய ஒரு காரியத்தை செய்யவில்லை. அவர்கள் சவால்களையெல்லாம் சமாழித்து யாழ் பல்கலைகழக மாண்பை காத்திருக்கிறார்கள். இருளில் இடம்பெற்ற நினைவு சின்ன இடிப்பின்போது இன்றைய துணைவேந்தர் ஒரு பாதுகாப்பு அதிகாரியின் குரலில் மிரட்டல் தொனியில் பேசினார். அரச தரப்பின் எழுத்துமூலமான அழுத்தம் என்றார். பின்னர் இராணும் போன்ற தரப்புகள் தமக்கும் இதற்க்கும் சம்பந்தமில்லை என்றார்கள். இன்று வேறொரு தொனியில் பேசுகிறார். மாணவர்கள் பழைய மாணவர்கள் தலையிட்டதன்மூலமே ஏனைய நினைவுத்தூபிகள் காப்பாற்றபட்டது என்பதற்க்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளது. உப வேந்தர் அவற்றைக் காப்பாற்றவில்லை. உபவேந்தர் கணத்துக்கு கணம் பேச்சை மாற்றிக்கொண்டிருபதற்க்கும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது. ராக்கிங் போன்ற விடயங்களில் உப வேந்தரின் நடவடிக்கைகளை நான் பாராட்டியிருக்கிறேன். உபவேந்தர் தன் மாண்புகுலையாமல் இராஜிநாமா செய்வதே பொருத்தமானது என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    ReplyDelete
  3. The Vice Chancellor's stance is reasonable. however the related society could try their rights out of the Govt. premises no?

    ReplyDelete
  4. பொது இடங்களிலும் அபகரிக்கப்பட்ட நிலப்பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலும் பலவந்தமாக இரவோடு இரவாக வைக்கப்படும் சிலைகளையும் இவ்வாறு அரசாங்கத்தினால் அகற்ற முடியுமா....

    ReplyDelete
  5. பொது இடங்களிலும் அபகரிக்கப்பட்ட நிலப்பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலும் பலவந்தமாக இரவோடு இரவாக வைக்கப்படும் சிலைகளையும் இவ்வாறு அரசாங்கத்தினால் அகற்ற முடியுமா....

    ReplyDelete

Powered by Blogger.