Header Ads



இலங்கையில் உடல் எரிப்பை நிறுத்தக்கோரும் ஐ.நா அறிக்கைக்கு கனடா, ஜேர்மன் தூதுவர்கள் வரவேற்பு


கொரோனாவினால்  உயிரிழப்போரின் உடல்களை  கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும்  கனடா  ஜேர்மன் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் டுவிட்டரில் தெரிவித்துள்ள்ளார்.

 'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத்தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டும்' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மக்கினொன் தெரிவித்திருக்கிறார்.


1 comment:

  1. Did the Sri Lankan Authorities expect such International Reaction when they decided on Cremation of the bodies of All Covid-19 victims? Or did they think that they can withstand All Pressure? Whatever it may be, the country is certainly in for a bad time with International Pressure mounting day by day.

    The Sooner the Govt. Swallows its Pride and agrees for Burial of the Covid-19 victims, the Better it is for the Families of Covid-19 victims and the Country as a Whole.

    ReplyDelete

Powered by Blogger.