Header Ads



கொரோனா தடுப்பூசி கொள்வனவு உரியமுறையில் இடம்பெறவில்லை, உதவ தயாரென்கிறார் ரணில்


கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு திட்டமும் இல்லை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிரிஹான பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் மார்ச் மாதம் தடுப்பூசி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

எனினும், அது முழுமையாக உண்மைக்கு புறம்பானது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது நாட்டில் உரிய முறையில் இடம்பெறவில்லை.

இலவச சுகாதார சேவை உள்ள அரசாங்கம், இதற்காக செலவுசெய்ய வேண்டும்.

அதனை செய்வதை விடுத்து, தங்களுக்கு நிதி வழங்குமாறு தனியார்துறையிடம் கையேந்துகின்றது.

நாடாளுமன்றத்திற்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

செலவுகளை அதிகரிக்க வேண்டுமாயின் அதனைக் கூறவேண்டும்.

இந்த நிலையில், திட்டத்துடன் முன்வந்தால், உதவுவதற்கு தாங்கள் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை செய்வதற்கு தாமதமானால், தடுப்பூசி கிடைப்பதும் தாமதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தனக்கென ஒரு ஆசனமும் இல்லாமல் இன்னும் தான் கட்சியில் விடடுக் கொடுக்கமாட்டேன் என மார்தட்டும் இந்த வீணாப்போனவன் அரசாங்கத்துக்கு உதவப் போகிறாராம். கேவலம்.

    ReplyDelete
  2. தடுப்பூசி விடயத்தில் ரணில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பது ஏன் என்று விளங்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.