Header Ads



பவித்திரா பதவி விலக வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி


வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும்.

அத்துடன் அவர் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இந்த கோரிக்கையை ஊடக சந்திப்பு ஒன்றின்போது முன்வைத்துள்ளார்.

நாட்டில் இன்று கொரோனா தொற்று தொடர்பில் உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிடும் தகவல்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையானோர் கொரோனாவுக்கு பலியாக அனுமதிக்கப்போவதில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று அதனைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையானோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என்று நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துநில் அமரசேன, யுக்ரெய்ன் நாட்டின் உல்லாசப்பயணிகள் வ்ந்து சென்றமையை அடுத்தே தலதா மாளிகையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.