Header Ads



பேலியகொடவில் இருந்து, அத்துருகிரியவிற்கு அதிவேக நெடுஞ்சாலை


புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையுடன் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் துறைமுக உட்பிரவேச அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நிர்மாணித்து நடாத்திச் சென்று ஒப்படைத்தல் (BOT) எனும் அடிப்படையில் 100% வீதம் வெளிநாட்டு நிதியுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு விண்ணப்பங்களை (RFP) கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1 comment:

  1. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அணுசரனையும் அதிவேக பாதை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம். எடுத்த கடனதை் திருப்பிக் கொடுக்கவோ, குறைந்த பட்சம் அவற்றுக்கான வட்டியைச் செலுத்தவோ வக்குஇல்லாத நாடு அதிவேக பாதை அமைக்க அவசரப்படுவதன் பிண்ணனி என்ன? முஸ்லிம் ஐனாஸாக்களைச் சுட்டுக்கருக்கிவிடுவதால் பெரிய இலாபம் ஒன்றை அடைகின்றார்களா எனவும் எண்ணத் தோன்றுகின்றது. திருடர்களின் அடாவடித்தனமும் காட்டு அரசாங்கமும் கோலோச்சுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.