Header Ads



ஹக்கீமின் உடல்நலம், எப்படி இருக்கிறது...?


- Rauf Hazeer -

சகோதரர் ஹக்கீமின் உடல் நலன் குறித்து பலரும் தொடர்புகொண்டு விசாரிக்கிறார்கள். அவரின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹக்கீம் தானாகவே முன்வந்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்களின் நலன் கருதி தனது PCR ரிபோர்ட் பற்றிய தகவல்களை தெரியப்படுத்தியுள்ள சூழலில் சில மேலதிகாரிகள் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  

1 . கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இருந்தபோது, அவர் சற்று உடல் உபாதைகளை உணர்த்தினால் இடை நடுவில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

( புதன் கிழமை பவித்திரா கதைத்தபோதும் , வியாழன் கம்மன்பில கதைத்தபோதும் ஹக்கீம் பாராளுமன்றில் இருக்கவில்லை )   

2. வீட்டிலேயே  ஓய்வில் இருந்த அவர் இடைக்கிடை விட்டுவிட்டு வந்த காய்ச்சல் காரணமாக வியாழக்கிழமை என்டிஜன் பரிசோதனை ஒன்றை செய்துள்ளார்.

3. அதன் அடுத்தகட்டமாக செய்யப்பட்ட  PCR பரிசோதனை முடிவு இன்று அதிகாலை கொரோனா தொற்றை உறுதி செய்தது. 

4. தற்போது அரச வைத்திய அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தலுக்காக தெற்கில் உள்ள நிலையம் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். ( குறைந்தது ஜனவரி 24 வரை )

5. என்டிஜன் பரிசோதனை அவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு பாதகமாக இல்லாமையால் அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

6. கடந்த 10 நாட்களுக்குள் அவர் குருநாகலைக்கும் கலகெதரைக்கும் மட்டுமே மக்கள் சந்திப்புகளுக்காக சென்றுள்ளார்.

அது தவிர கண்டியில் அவரது வீட்டிற்கு வழமைபோல சிலர் வந்து போயுள்ளனர். அலுவலகங்களில் அவரை சந்தித்தவர்கள் தமது உடல்நிலை பற்றி கவனமெடுப்பது சிறந்தது. 

கோவிட் மறைப்பதற்காக ஓர் இரகசிய நோய் அல்ல. அதற்கென விஷேடமான மருந்துகள் எவரையும் இல்லை. 

காய்ச்சல்,  தடிமல் மற்றும் தொண்டைநோவுகளுக்கு , அவை இருப்பின் அவ்அவ் நோய்களுக்கு உரிய சாதாரண மருந்துகளை உட்கொள்வதுடன் முறையாக ஓய்வில் இருந்தால் போதுமானதென இன்று காலை நான் தொடர்புகொண்ட வைத்தியர்கள் சொன்னார்கள்.

அதனுடன் சேர்த்து உங்கள் அனைவரினதும் துஆக்கள் மிக விரைவாக சகோதரர் ஹக்கீமை வழமையான வாழ்க்கைக்கு மீட்டெடுக்கும் என நம்புகிறேன். 

அல்லாஹ் அவர் மீதும்,  உங்கள் மீதும் அருள் பொழிவானாக.

ஆமீன் !

6 comments:

  1. பவித்ராவும் கம்பன்பிலவும் கதைக்கும் போது அவர் அங்கு இருக்கவில்லை ....
    இருந்திருந்தால் ஓடிப்போய் வாய்கள இறுக பொத்தியிருப்பாரோ?

    ReplyDelete
  2. அவர் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  3. அன்பு தோழர் தலைவர் ஹக்கீம் அவர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறேன். பேரினவாதிகளால் முஸ்லிம்களும் தமிழர்களும் அச்சுறுத்தப்படுகிற இந்த நெருக்கடியான தருணத்திஉங்களைப்போன்ற ஒற்றுமைப் படுத்தும் சக்திகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். நீங்கள் விரைவில் குணமடைந்து புத்துணர்வுடன் களத்துக்கு வரவேண்டும்.

    ReplyDelete
  4. அல்லாஹ்விடம் அவருக்காக பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  5. MY, JJ, You don't know how to handle situations?

    ReplyDelete

Powered by Blogger.