Header Ads



முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை அதிகரிக்க அலி சப்ரி திட்டமிட்டு செயற்படுகிறார் - எல்லே குணவன்ச தேரர்


- IBC -

பொலிஸ் பரிசோதகர்களாக 150 சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நீதி அமைச்சரின் திட்டத்தின் மூலம் இனவாத மதவாத சதி முன்னெடுக்கப்படுகின்றது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இதனை தௌிவுபடுத்தி எல்லே குணவன்ஸ தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சட்டத்தரணிகள் இணைப்பு விடயத்தில் தமிழ் மொழி திறன் விசேட திறமையாக கருதப்படும் என்ற ஏற்பாட்டின் மூலம் முஸ்லிம்கள் பலருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்மூலம் இனவாத மதவாத குழுவினர் அரச நிறுவனங்களில் புகுந்து பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை அதிகரிக்கவே நீதி அமைச்சர் அலி சப்ரி திட்டமிட்டு செயற்படுவதாக எல்லே குணவன்ச தேரர் கூறினார்.

எனவே நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்துள்ள யாப்பு விரோத, மக்களுக்கு துரோகம் இழைக்கும் இனவாாதம் மதவாதத்தை போசிக்கும் பொலிஸ் துறைக்கு சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை செயற்படுத்த வேண்டாம் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

4 comments:

  1. Epdiyellamo think panraanugalappa intha kaaviya pottuttu appappa....

    ReplyDelete
  2. ஒவ்வொரு கிராமத்திலும் தனவந்தர்களைப் பார்க்கின்றோம். அவரகளிடம் ஏராளமான ஏக்கர் வயற் காணிகளும் கால்நடைகளும் இயந்திரங்களும் இருக்கும். அவற்றின் உதவியால் பண்ணை வேலைகள் மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த தனவந்தர் வயல் பக்கம் செல்ல மாட்டார் வியர்வையில் புழுதியில் உருண்டு பிரளமாட்டார். ஆயினும் மூன்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவரது வீட்டிலும் வங்கியிலும் பணம் புரளும். மாடி வீடு கட்டி வாழ்வார்கள். அவரது வேலையாட்களும் மிகவும் கவனமாக தம்முடைய பணியை செய்து வருவார்கள். அந்த தனவந்தர் வயலுக்கு மேல் வயல் வாங்குவார். வீட்டிற்கு மேல் வீடு அமைப்பார். பிள்ளைகள் நல்ல நல்ல பெரிய பாடசாலைகளில் கற்று வருவர். இதில் என்ன விசேடம் என்னவென்றால் தொழிலாளர்கள் தமது எஜமான் சொல்லும் வேலைகளை முறைப்படி அச்சொட்டாக செய்து நாட்சம்பளம் வாங்கி பணம் இல்லாத நாட்களில் மற்றவரகளிடம் வட்டிக்குப் பணம் வாங்கி அப்படியே நாட்களைக் கடத்திக் கொண்டு போவார்கள். பிள்ளைகளுக்குப் படிப்பு இருக்காது. ஏனென்றால் தம்தகப்பனுக்குப் பிறகு அந்த முதலாளியின் வேலைகளை இவரகள்தானே பார்க்க வேண்டும். இப்படியே இவரகளது வேலை நடந்து கொண்டு செல்லும். "பொலிஸ்" வேலைகளையும் இவரகள்தான் பார்க்க வேண்டும். தொழிலாளர்கள் அரச விருந்தினராக செல்லும் போது ஏதோ அவரகளது குடுமபத்தைக் கவனிக்கும் பொறுப்பு முதலாளிமாரிடம் வரும். இப்படியே தொழிலாளர்களின் வாழக்கை தொடர்ந்து செல்லும். தொழிலாளர்கள் தம் முதலாளிகளை தம் தலையை உயர்த்தித்தான் பார்க்க வேண்டுமட். ஆனால் முதலாளிகள் தம் வேலையாட்களை தம் தலையைத் தாழ்த்திப் பார்க்கமாட்டார்கள். இதனை விளங்கி எடுப்பவரகளுக்கு இது ஒரு சிறந்த பாடம்.

    ReplyDelete
  3. Jaffna Muslim I kindly request you to
    Don't give important to these people comments.
    Every country got the people like this.
    Believe only Allah.

    ReplyDelete
  4. I don't think Minister Ali Shabry is a person who support Islamic extremism.

    ReplyDelete

Powered by Blogger.