Header Ads



சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகன் குறித்து, அவரது உம்மா எழுதிய உருக்கமான கவிதை


                           ஈரைந்து திங்கள் உனைச்சுமந்தேன்.

என் கருவறையில் கட்டிக்காத்தேன்.

என் கண்ணான கண்மணியே காகிதத்தில் 

ஓராயிரம் வரிகள் வரைய வேண்டும்.


ஆனாலும் ஒரு சில வரிகள் உனக்காக

உன்னை நினைக்கும் போதெல்லாம்.

 என் இதயம் இயங்குவதை நிறுத்துகிறது.

உனைக்காணாத போதெல்லாம் என் கண்கள் 

கடலாய் பெருகுகிறது.

நாட்டுக்கோர் நல்ல பிள்ளையாய் பெற்றேன்.

 நீ செய்த குற்றமென்ன என் மகனே..

நல்ல பிள்ளையாய் வாழச் செய்தது குற்றமா? 

 நல்ல கல்வியை கற்க வைத்தது குற்றமா?? ஏழைக்கு உதவ சொன்னது குற்றமா ?? உண்மையை உரைக்கச்சொன்னது குற்றமா??

 இறைவா இதையெல்லாம் செய்தேன்.

 இருந்தும் என் மகன் சிறை சென்றார்.

இனவாதமோ.. தீவிரவாதமோ.. பயங்கரவாதமோ.. செய்யும் பிள்ளையை சுமக்கவில்லை என் கருவறை ..

சீரான சிறப்பான சேவைகள் செய்யும் பிள்ளையாய் வளர்த்தேன்....

இனியும் வாழச் சொல்லுவேன்...

என் ரப்பே !!

 என் பிள்ளையை என்னிடத்தில் தந்துவிடு....

 ஏங்கும் ஏழையான     என் இதயம் அமைதியாக ...

அன்பை அள்ளி சொரிய.... அன்னையான என்னிடத்தில் அனுப்பி விடு..

No comments

Powered by Blogger.