Header Ads



இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் - சரத்வீரசேகர


இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்கள் நட்புநாடு என்பது உண்மை என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என குறிப்பிடடுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தததை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என மேலும் குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம்; ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது எனகுறிப்பிட்டுளள சரத்வீரசேகர புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும்,இதன் காரணமாக மாகாணசபை முறைமாற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. இராஜதந்திரம், அரசியல் தெரியாத படையினரைப் பொறுப்பான பதவிகளுக்கு அமரத்துவதன் விளைவுதான் எந்த பாரதூரமும் தெரியாது உளருவது. ஆனால் அதில விசேடம் என்னவென்றால் உலகில் இதுபோன்று அறிவும் அனுபவமும் இல்லாத ஓட்டைகளை உயர்பதவிக்கு அமர்த்தும் கலாசாரம் உடைய உலகில் ஒரே நாடு இலங்கை என்றபெருமை இருக்கின்றது.

    ReplyDelete
  2. You had Parliament election on Corona virus period but for this minority alergic.

    ReplyDelete
  3. இந்தியா என்ன போற போக்கில் மாலைதீவும் இனி தலையிடும்.

    ReplyDelete
  4. இந்தியா என்ன போற போக்கில் மாலைதீவும் இனி தலையிடும்.

    ReplyDelete
  5. திரு சரத் வீரசேகர, உளற வேண்டாம். இலங்கையின் உள்விவகாரம் சிங்கள பகுதிகளுக்குள் சுருங்கிவருகிறது. கொழும்பில் வைத்து இந்திய வெளிவிபகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் கொழும்பில் வைத்து இலங்கை தேசிய இனப்பிரச்சினை பஜக காங்கிரஸ் கட்ச்சி அரசியலல்ல அகில இந்தியாவின் தேசிய கொள்கை என உறுதிபட கூறிவிட்டார். மாகாணசபை செல்வநாயகம் காலத்தில் இருந்தே ஆரம்பித்த எமது விடுதலைப் போராட்டத்தின் கனி. அதனை உங்களைப்போன்ற இன வாதிகள் பறிக்க ஒருபோதும் அனுமதியோம்.

    ReplyDelete
  6. @ஜெயபாலன், உங்கள் கருத்தினை இன்னமும் உரத்துக் கூறுங்கள்.

    ReplyDelete
  7. You should know the reason why India is pushing Sri Lanka is because you do not respect the rule of law and thinks you can do anything to minorities including Tamils, Christians and Muslims. Remember last time India took one side, it lasted on a thirty years war.

    ReplyDelete
  8. You should know the reason why India is pushing Sri Lanka is because you do not respect the rule of law and thinks you can do anything to minorities including Tamils, Christians and Muslims. Remember last time India took one side, it lasted on a thirty years war.

    ReplyDelete
  9. Remember, India is a Regional Power and has become involved in Regional Power Play which includes the Sole Super Power on India's side against the other Regional Power China.

    So, India will do whatever it wants against those aligned with China thanks to the U.S. backing. Any action by SL with China which India sees as being Hostile to its interests, India will not only Object but also do everything it can to stop such action. SL has no choice but to face the consequences for her choice.

    So, the lesson is, SL has to make sure that when choosing friends, she does not Create Enemies, and certainly not a Regional Power like India which has the Backing of the Sole Super Power.

    ReplyDelete

Powered by Blogger.