Header Ads



கொரோனா மரணங்கள் தொடர்பான தீர்மானத்தில், அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது - அபயதிஸ்ஸ தேரர்


கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதத்தை அரசாங்கமே சமூக பிரச்சினையாக மாற்றியதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா மரணங்கள் தொடர்பான தீர்மானத்தில் எந்த அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது. கொரோனா வைரஸை இன்னும் நாம் அடையாளம் கண்டு முடிக்கவில்லை.

கொரோனா வைரஸின் செயற்பாடு தொடர்பாக விஞ்ஞானிகளுக்கு இதுவரை சரியான புரிதல் ஏற்படவில்லை. இது உலகத்திற்கு புதிதானது. இதனால், கொரோனா மரணங்கள் தொடர்பில் இனவாத அல்லது அடிப்படைவாதத்திற்கு அடிப்பணிந்த தீர்மானத்தை எடுக்கக் கூடாது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Will the Professor monk explain on what basis the decision to ONLY cremate the bodies of those who die of Covid-19? Is it not based on Rabid Racialism and Not on any scientific justification? Does he not know that this Rabid Racialism is from those on his side?

    ReplyDelete
  2. எனக்கு என்டா ஒன்னுங் வெளங்க இல்ல பாருங்க. கொவிட்டால் இறந்தவரகளின் உடலங்களை எப்புடி அகற்றுவது என்ட பிரச்சினையை இப்ப ஒரு பக்கமா வையுங்க. கல்விக் கூடங்களிலிருந்து வெளியான சாமிமார்களும் கொவிட்டால் பாதிக்கப்பட்டு இறந்த உடலங்களை எரிக்கத்தான் வேணும் என்று அடம் பிடிப்பதனைப் பார்க்கும்போது பெரும் ஆச்சரியமா இருக்கு பாருங்கோ? இலங்கையில் காணப்படும் மதம்சார் கல்வி நிலையங்களில் எப்போது Medical Science ஐயும் சேர்த்துக்கொண்டார்கள்? இப்ப என்னடான்னு பாத்தா மதஙகளின் மாண்மியத்தை மாத்திரம் கற்றுக் கொடுக்கின்ற ஒவவொரு மதவாதிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றார்கள். வைத்தியத் துறையிலும் சுகாதாரத்துறையிலும் புகழ்மிக்க கற்கைத் துறைகளில் ஆராச்சி செய்து கடின உழைப்பின் பின்னர் கலாநிதிப் பட்டங்கள் பெற்ற Immunologists, Microbiologists, Virologists போன்றோர் கொவிட்டால் பாதிக்கப்பட்ட உடலங்களை எப்படியும் அகற்றலாம் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்துவிட்டாலும்கூட் இப்படியான உடலங்களை எரிக்கத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் இத்தகைய மதவாதிகளின் நடத்தைக் கோலங்களை எந்தத் தராசில் போட்டு நிறை பார்ப்பது?

    ReplyDelete
  3. Bro.INDHA MODA GULLANUHALUKKU MUULAI IRUNDHAL NAMMA NAADU ENGYO POOI IUKUMMALLAWA

    ReplyDelete

Powered by Blogger.