Header Ads



உடனடி வாக்கெடுப்பை கோரும் சந்திரிக்கா - மைத்திரிக்கு கடிதம் அனுப்பினார்


கட்சி மற்றும் கட்சியின் உறுப்பினர்களின் மீது அன்பு கொண்ட புதிய குழுவிற்கு கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வழிசமைக்கும் வகையில் உடனடியாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் கட்சியில் நீக்கப்படவும் இல்லை விலகவும் இல்லை என்பதை தெரியப்படுத்துவதற்கான கடிதம் என தெரிவித்து குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவின் 'த ஹிந்து' பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வி தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தமது கடிதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எவ்வாறான செயற்பாடுகளை புரிந்தாலும் தம்மால் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கட்சிக்குள் உள்ளக பிரச்சினைகளை ஏற்படுத்தி கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதற்கு தாம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.