Header Ads



திலித் ஜயவீரவின் வழக்கு தள்ளுபடி


உலக சேவையின் சந்தேசயவிற்கு எதிராக வர்த்தகரான திலித் ஜயவீர தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று -12- வழக்கு செலவு நிபந்தனைகளுக்கு அமைவாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி TNL தொலைக்காட்சி சேவையின் தலைவர் ஷான் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலுடன் வௌியிடப்பட்ட செய்தியால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வர்த்தகரான திலித் ஜயவீர இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

தான் நிதித்தூய்தாக்கல், சட்டவிரோதமான முறையில் பணம் உழைத்தல், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் துமிந்த சில்வா உள்ளிட்ட சிலருடன் கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் சொகுசு அறை ஒன்றை கொள்வனவு செய்ததாகவும் ஷான் விக்ரமசிங்கவிற்கும் மற்றுமொருவருக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குறித்த செய்தியில் அறிக்கையிடப்பட்டதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் திலித் ஜயவீர BBC சந்தேசயவிற்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனூடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக தெரிவித்து 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் BBC சந்தேசயவிற்கு எதிராக திலித் ஜயவீர வழக்கு தாக்கல் செய்தார்.

இதற்காக 10 மில்லியன் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுட்ண்ஸ் இழப்பீடாகக் கோரியிருந்தார்.

நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கு செலவு நிபந்தனைகளுக்கு அமைவாக இதனைத் தள்ளுபடி செய்து கொழும்பு மாவட்ட நீதிபதி ருஷாந்த கொடவெல இன்று உத்தரவிட்டார்.

BBC சந்தேசய சார்பில் B.L.& F.D சேரம் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனைகளின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுடன், மெக்ஷி பெஸ்டியன், சுகத் கல்தேரா, வசந்தகுமார் நைல் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கில் வர்த்தகரான திலித் ஜயவீர சார்பில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சட்டத்தரணி சமித் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.