Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு ACJU, விடுக்கும் விஷேட செய்தி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற, அதன் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மிகப் பழமையான அமைப்பு என்பதை யாவரும் அறிவர். இந்த அமைப்பு அதன் நூற்றாண்டு காலப் பூர்த்தியை அண்மித்திருக்கும் சந்தர்ப்பம் இது (1344-1442).

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தனது இலட்சிய பயணத்தை தொய்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். இனிவரும் காலங்களிலும் அல்லாஹ்வின் பேரருளால் அதன் பணிகள் சீராகவும், சிறப்பாகவும் தொடரும் என்ற ஆழமான நம்பிக்கை நமக்குண்டு. வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் இப்பணியை தொடர அருள்பாளிப்பானாக!

அல்குர்ஆன், அஸ்ஸூன்னா, இஜ்மா, கியாஸ் ஆகியவற்றின் அடிப்படையிலும் எமது முன்னோர்களின் வழிகாட்டலின் அடிப்படையிலும் தீனின் மேம்பாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் சமூக ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்காகவும் (https://cutt.ly/UjeCIrX) ஜம்இய்யா தன்னாலான பங்களிப்புக்களை செய்து வருகின்றமையை நீங்கள் அறிவீர்கள்.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு அதன் மத்திய சபையின் ஒத்துழைப்புடன் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம், அன்பு, கலந்தாலோசித்தல், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, நல்லெண்ணம், தாராளத்தன்மை, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைப் பேணி மிகவும் கட்டுப்பாடாகவும் கட்டுக்கோப்புடனும் இயங்கி வருகின்ற ஒரு முன்மாதிரி அமைப்பாகும். அங்கு வீணான வாதங்கள் முன்வைக்கப்படுவதில்லை. பேதங்கள் பாராட்டப்படுவதில்லை. சண்டை, சச்சரவுகள் இல்லை. எந்தவொரு விவகாரத்திலும் மார்க்கம் சொல்லும் கருத்து வேறுபாடுகளின் போது பேண வேண்டிய ஒழுக்கங்களையும், தர்மங்களையும் பேணி அனைவரும் தத்தமது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சுதந்திரமாக முன்வைப்பர்;. இறுதித் தீர்மானம் மிகவும் சுமுகமாகப் பெறப்படும். இதுதான் இன்று வரை பேணப்பட்டு வரும் ஜம்இய்யாவின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாகும். (https://cutt.ly/UjeCSYB)

ஜம்இய்யத்துல் உலமா மீது அபிமானமும் நம்பிக்கையும் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை வீணாக்கி விடாமல் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது. எனவே, ஜம்இய்யாவுக்குள்ளும் அதன் நிறைவேற்றுக் குழு மட்டத்திலும் பரஸ்பர நல்லெண்ணமும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இன்று வரை வலுவாக இருக்கின்றன என்ற உண்மையை இங்கு சமூகத்திற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றோம். என்றும் போல் ஜம்இய்யத்துல் உலமா அதன் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை அல்லாஹ்வின் துணைக் கொண்டு அதன் சக்திக்கு உட்பட்ட வகையில் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது என்பதை இத்தால் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். (அல்லாஹ்வின் அனுகூலமேயன்றி வேறெதுவும் இல்லை).

குறிப்பாக, சமூகம் காலத்திற்குக் காலம் எதிர்நோக்கி வந்துள்ள எல்லா வகையான சவால்களின் போதும் ஜம்இய்யா தனக்கே உரிய பாணியில் அவற்றை எதிர் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் பின் நின்றதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த வகையில் தற்போது சமூகம் எதிர் கொண்டுள்ள கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் ஜனாஸாக்களை எரிக்கும் சுகாதாரத் துறையின் நிலைப்பாட்டை மாற்றி அவற்றை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் ஜம்இய்யா தனிப்பட்ட முறையிலும் பிற அமைப்புக்களுடன் இணைந்தும் ஆரம்பம் முதல் இன்று வரை பெருமுயற்சி செய்து வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. (https://cutt.ly/njeVu8G)

ஆகவே, சமூகம் பல்வேறு சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகங் கொடுத்துள்ள இன்றைய கால கட்டத்தில் வீணான சந்தேகங்களைக் கிளப்புதல், வதந்திகளைப் பரப்புதல், வீணான தர்க்கங்களில் ஈடுபடுதல் போன்ற அல்லாஹ்வின் அருளிலிருந்து சமூகத்தை தூரமாக்கும் செயற்பாடுகளிலிருந்து முற்றாக விலகி அவனின் அருளைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஈடுபடுமாறும் பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

10 comments:

  1. Janaza vidayathil neega 000 koli muttai makkalai arpattatuku kuda alika mudiyata kollaihale insha allah unngaludaiya poli vasatuku nichim tannani taruwan aameen

    ReplyDelete
  2. ACJU has done a great service to the Muslim community in Sri Lanka. May Allah shower his blessings to further improve and be one of the strong bodies in the world.

    Everyone has right to give the constructive criticism but criticizing specific individuals should not be entertained. If anyone slandering or backbiting by names, that is the point that we should stop listening further as that person is violating the basic Islamic ethics.

    As per my view, looking at some past incidents, ACJU seems lacking strong administrative body to handle certain practical situations. Perhaps it the high time to appoint a strong advisory board including intellectuals etc

    ReplyDelete
  3. Oh really neengale sollikonga angeeharikkappatta apaippunnu... makkal kastappadumpothu sariyaana mudivi edukka mudiyaatha thuppullaatha amaippu

    ReplyDelete
  4. What made them to release a such a urgent message to people soon after release of expert report regarding disposal of covid death? Whether burial will be allowed or not ACJU did not do anything effective measure.

    ReplyDelete
  5. உங்களை ஏசுவதில் என்ன பலனும் இல்லை திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கூட்டம் ACJU

    ReplyDelete
  6. அ.இ.ஜ.உ. சபை எமது நாட்டு முஸ்லிம்களிடம் காணப்பட்ட பல மூட நம்பிக்கைகளையும் மார்க்கமில்லாத பல பழக்க வழக்கங்களையும் களைவதற்கு மெது மெதுவாக காலத்தின் தேவைக்கேற்ப பணியாற்றி வந்துள்ளதனை மறுப்பதற்கில்லை. மேலும் தற்போதைய உலகமாற்றத்திற்கேற்ப தீர்மானங்கள் எடுப்பதற்கும் உலக முஸ்லிம்களின் அங்கமாக மாறுவதற்குமான பாரிய முன்னெடுப்பை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சிறந்த பல்துறை அறிவு ஜீவிகளைக் கொண்ட உப அமைப்பொன்று உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் உணரப்படுகிறது.

    ReplyDelete
  7. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து யுபிஎஃப்ஏ / எஸ்.எல்.எஃப்.பி அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக உல்லாசமாக இருந்தபோது கொழும்பு 12 இல் ஏ.சி.ஜே.யு ஒரு பெரிய நிலத்தையும் பெற்றது. மேலும் மஹிந்தாவிடம் இருந்து ஏ.சி.ஜே.யு பெற்ற இந்த அரசு நிலத்திற்கு என்ன ஆனது, என்ன நடந்தது? அது "விற்கப்பட்டது" என்றால் பணம் எங்கே போனது? இந்த கேள்விக்கு ரிஸ்வி மவுலவி இதுவரை பதிலளிக்கத் தவறிவிட்டார்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  8. Many great personalities have contributed to the success of the ACJU during the past 100 years. ACJU didn't take a viable action to the Qazi court system. This has led many Muslims women to suffer when it comes to divorce and marriage. Maktab syllabus for grade 1 students should be made easy and understandable.

    ReplyDelete
  9. WHAT SHAME DONT SAY ALL MUSLIM ACCEPT YOUR POLITICS ACJU, GET READY WORK FOR GOVERMENT PREPARE TO WORK BEFORE JENIVA

    ReplyDelete
  10. Ade manja ponnayan Noor Nizam ne karutu sollada gotha da SOO nakura nai nee Janaza eriyum podu karutu sollama ippa some tuka vandiruka poda harami

    ReplyDelete

Powered by Blogger.