மலசல கூடங்களின் கழிவுகள் நேரடியாக நீருடன் கலப்பதால் நிலத்தடி நீரின் தரமும் தன்மையும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொடுக்காவிட்டால் எமது குடிநீர் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய மலசலகூட கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பான கொள்கை தயாரிப்பது சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,..
தற்போது எமது ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு இணங்க மலசல கூடங்களின் கழிவுகள் நேரடியாக நிலத்தடி நீரோடு கலக்கின்றன. அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் பாரிய வேலைத் திட்டமொன்றை தற்போது ஆரம்பித்துள்ளோம்.
அது தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கிணங்க எதிர்காலத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றின் நிர்மாண நடவடிக்கைகளின்போது கழிவுகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் அறிமுகம் செய்து வைக்கவுள்ளோம். நாட்டில் அனைவருமே இது தொடர்பில் தெளிவுபெறவேண்டும் இல்லாவிட்டால் இன்னும் சுமார் 15 வருடங்களில் எமக்கு சுத்தமான குடிநீர் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
ஷம்ஸ் பாஹிம்
1 கருத்துரைகள்:
இது எல்லாம் பிரச்சினையே அல்ல. இருக்கவே இருக்கிறது மாற்றுவழி. ஒன்று - நீர் வழஙகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்து மக்களுக்கு வழங்குதல். அடுத்தது மேலும் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் வெளிநாடுகளில் இருந்து அதுவும் அண்டை நாடுகளான சீனா இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தண்ணீரை இறக்குமதி செய்து தண்ணீரை இறக்குமதி செய்யும் உலகின் முதலாவது நாடு என்ற பெருமையைப் பெறலாம். எப்படியிருந்தபோதிலும் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவரகள் முஸ்லிம்கள்மீது கொண்டுள்ள அன்பிற்கும் ஆதரவுக்கும் அவரகளுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியாது.
Post a comment