Header Ads



மத்திய கிழக்கில் 89 இலங்கையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு - 40000 தொழிலாளர்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்


மத்தியகிழக்கில் கொவிட்-19 காரணமாக 89 இலங்கையர்கள் இதுவரை மரணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(SLBFE) இன்று -05- தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவது நடைமுறையிலுள்ள தொற்று நோய் காரணமாக சாத்தியமில்லை என்பதால் அவை மத்திய கிழக்கிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இறந்தவர்கள் குறித்த அறிக்கைகள் கிடைத்ததும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடாக 40ஆயிரம் ரூபா ஆரம்பத் தொகையாக வழங்கப்படும் என்றும் மேலதிக கொடுப்பனவாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வரை கிட்டத்தட்ட 40 ஆயிரம் தொழிலாளர்கள் வெளிநாடுகளிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மத்தியகிழக்கிலிருந்து வந்தவர்கள் என்றும் மங்கள ரந்தெனிய கூறினார்.

No comments

Powered by Blogger.