Header Ads



பிரதமரின் வழிகாட்டுதலில் நடுத்தர குடும்பங்களுக்காக, 5,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசின் திட்டம் ஆரம்பம்


நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று -04- கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் வழிகாட்டலுக்கமைய நிரந்தர வீட்டு வசதிகள் இல்லாத நடுத்தர குடும்பங்களை கவனத்திற் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் கொழும்பு ஊறுகொட வத்த பிரதேசத்தில் முதற்கட்ட வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. அதற்கிணங்க 40 பில்லியன் ரூபா செலவில் முதற்கட்டமாக 3,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தின் கீழ் மேற்படி 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக கொழும்பு, கண்டி, கம்பஹா உள்ளிட்ட பிரதேசங்களில் காணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒன்றரை வருடங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவு பெறும் என்றும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ஊறுகொடவத்த, ப்ளூமெண்டல் ,மாலபே மற்றும் பொரலெஸ்கமுவ பிரதேசங்களில் இந்த வீட்டுத் திட்டங்கள் அமைய உள்ளன.

மேற்படி வீடுகள் நடுத்தர வருமானத்தை கொண்டுள்ள குடும்பங்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கான விலைகள் தீர்மானிக்கப்படும் போது காணிகளுக்கான பெறுமதி உள்ளடக்கப்படமாட்டாது என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.