Header Ads



ஹோமாகவில் 5 ஜனாஸாக்கள் - முஸ்லிம்கள் எரிப்பதை மறுப்பதாலும், சவப்பெட்டி வழங்காமையாலும் பிரேத அறையில் காத்திருப்பு


ஹோமாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் பல நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த 5 நபர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஹோமாகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் நதீரா தயவங்ச தெரிவித்துள்ளார்.

பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுடைய சடலங்கள் என்பதுடன் அவற்றில் நான்கு சடலங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சடலம் வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்ய வேண்டும். முஸ்லிம்கள் தகனம் செய்வதை விரும்பாமை மற்றும் சவப்பெட்டிகளை வழங்காமை காரணமாக சடலங்கள் பல நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குளிர்சாதன பெட்டியில் வைக்காது வெளியில் வைக்கப்பட்டுள்ள சடலம் கடுமையாக பழுதடைந்துள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.