Header Ads



ஆங்கில புத்தாண்டு நாளில் 3.6 இலட்சம் குழந்தைகள் பிறப்பு


உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை 10 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணித்து வருகிறது யுனிசெப் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி இன்று புத்தாண்டு நாளில் 3.6 இலட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்திருக்கலாம் என கணித்துள்ளது.

இதன்படி, 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

இந்தியாவில் - 59,995 குழந்தைகள்

சீனாவில் - 35,615 குழந்தைகள்

நைஜிரியாவில் - 21,439 குழந்தைகள்

பாகிஸ்தானில் - 14,161 குழந்தைகள்,

எதியோப்பியாவில் - 12,006 குழந்தைகள்

அமெரிக்காவில் - 10,312 குழந்தைகள்

எகிப்தில் - 9,455 குழந்தைகள்

வங்காளதேசத்தில் - 9,236 குழந்தைகள்,

கொங்கோ குடியரசில் - 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது என்ன புதுமை!!! அல்லாவினால் படைக்கப்பட்ட சாதாரன ஒரு நாள் இவ்வளவு buildup ஏனோ....

    ReplyDelete

Powered by Blogger.