Header Ads



பலூன்களுக்குள் கொரோனா வைரஸ் நிரப்பப்பட்டு வீசப்பட்டதாக பரவிய வதந்தியினால் பதற்றநிலை - பரிசோதித்ததில் 2 க்கும் நெகட்டிவ்


ஏ.எம். கீத்

சிறுவர்கள் விளையாடிய பலூன்களுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட சம்பவமொன்று, திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலை - கண்டி வீதியில் அமைந்துள்ள ஆண்டாங்குள பிரதேசத்தில் நேற்று (25) காலை இந்தெரியாத நபர்களால் விட்டுச்செல்லப்பட்ட பலூன்களால் அப்பிரதேசத்தில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டது.

கருப்பு நிற பலூன்கள் சில அப்பிரதேசத்தில் காணப்பட்டதை அடுத்து, அந்த பலூன்களை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிய நிலையில், பலூன்களுக்குள் கொரோனா வைரஸ் நிரப்பப்பட்டு, ஆண்டாங்குள பிரதேசத்தில் வீசப்பட்டதாக தகவல் பரவியது.

இது தொடர்பில் அப்பிரதேசவாசிகளால் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

ஸ்தலத்துக்கு விரைந்த உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், இரு பலூன்களை அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதனடிப்படையில், இரண்டுக்கும் நெகட்டிவ் முடிவுகள் வந்தன.

இதனையடுத்து, பலூன்களுக்குள் கொரோனா வைரஸ் என்பது வதந்தி என்றும் இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

1 comment:

  1. சிலர் சிரிப்பார் சிலர் அழுவர் நான் ஹ்ஹஹா உலக மஹா கண்டுபிடிப்புகள் நாம் தாய் திருநாட்டில்

    ReplyDelete

Powered by Blogger.