Header Ads



பவித்திராவின் கொரோனாக்கு நான் பொறுப்பல்ல, அவர் எனது 2 உத்தரவுகளை மீறிவிட்டார் - தம்மிக்க போர்க் கொடி


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பிலான சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. எந்தப் positive க்கு நீ பொருபல்ல தெளிவாகச்சொல்லு?

    ReplyDelete
  2. 😄😄😄😄😄😄😄😄😄😄😄

    ReplyDelete

Powered by Blogger.