Header Ads



2 மாத குழந்தை தகனம் - அலிசாஹிர் மௌலானாவின் டுவிட்டர் பதிவு


வெலிகமவில் பெற்றோரி;ன் சம்மதத்தினை பெறாமல் இரண்டுமாத குழந்தையின் உடலை அதிகாரிகள் தகனம் செய்த சம்பவம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஜாஹீர் மௌலானா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது.

வெலிகமவில் கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்டஇரண்டுமாத குழந்தை முகமதி;ன் தந்தை நியாசுடன் பேசினேன்.

பிறந்தது முதல் குழந்தை முகமட் சுவாச இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலும் காலிகராப்பி;ட்டிய வைத்தியசாலையிலும் குழந்தைக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன இதற்கான ஆவணங்கள் உள்ளன.

அதேவேளை 25 ம் திகதி முகமட்டின் தாய் சிஹானா உயர் இரத்த அழுத்தம் உட்பட பல பாதிப்புகள் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பார்த்துக்கொள்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்த தந்தை தனது மகனுடன் வீட்டிலிருந்துள்ளார்.

சிகானா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் அவரை மருத்துவமனையில் பராமரித்த பெண் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.வேறு பல நோயாளிகளை பராமரித்ததன் காரணமாக அவர் கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிஹானாவை தனிமைப்படுத்தலிற்காக வருமாறு மருத்துவமனையிலிருந்து அழைத்துள்ளனர்.

அவர் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.ஆனால் அது குறித்த ஆவணங்களை அவர்கள் பார்க்கவில்லை

எனினும் பிசிஆர் சோதனையில் அவர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியான பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

13ம் திகதி குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 14 ம் திகதி மாலை வெலிகமவில் உள்ள வலன மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்சென்றுள்ளனர்.

குழந்தையை மாத்தறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள் தந்தையை வீட்டில் தனிமைப்படு;த்தலை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் குழந்தை இறந்த செய்தி மருத்துவமனையிலிருந்து கிடைத்துள்ளது,

மருத்துவமனை கொரோனா வைரஸ் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

தந்தை உறவினர்களை மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் குழந்தை கொரோனவினால் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் குழந்தையின் உடல் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்புகின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மீண்டும் அழைத்த உறவினர்கள் காலி கராப்பி;ட்டிய மருத்துவமனையிலும் குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் குழந்தையின் உடலை மீண்டும் பிசிஆ சோதனைக்கு உட்படுத்துமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.அதிகாரிகள் அதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

4.30மணியளவில் தாய்தந்தைக்கோ அல்லது உறவினர்களிற்கோ தெரிவிக்காமல் குழந்தையின் உடலை அம்புலன்ஸ் மூலம் மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அதனை பார்த்த உறவினர்கள் அம்புலன்சை பின்தொடர்ந்தவேளை அது மயானத்திற்கு சென்றுள்ளது.

மயானத்தில் உறவினர்களின் மன்றாட்டத்திற்கு மத்தியில் குடும்பத்தினரின் உறவினர்களின் அனுமதியை பெறாமல் குழந்தையின் உடலை தகனம் செய்வதற்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

தந்தை தற்போது கடும் துயரத்தில் உள்ளார்,தான் பாதிக்கப்படாத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்ற குழப்பத்தில் அவர் காணப்படுகின்றார்.

மருத்துவமனையில் முதலில் இடம்பெற்ற பிசிஆர் சோதனைக்கும் பின்னர் இடம்பெற்ற பிசிஆர்சோதனைக்கும் இடையில் முடிவுகள் எவ்வாறு மாறின என்பது குறித்தும் அவர் குழப்பத்தில் உள்ளார்.

இன்னொரு பிசிஆர் சோதனையை மேற்கொள்வோம் என்ற உறுதியளித்த மருத்துவமனை தங்களின் மதநம்பிக்கைகளை புறக்கணித்து தனக்கு தெரிவிக்காமல் ஏன் குழந்தையின் உடலை தகனம் செய்தது என்பது தெரியாத துயரத்தில் அவர் காணப்படுகின்றார்

1 comment:

  1. சதிகளுக்கு சமாதிகட்ட இறைவன் போதுமானவன்!

    ReplyDelete

Powered by Blogger.