Header Ads



18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது


18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று -20- நாடாளுமன்றத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்க 75 பில்லியன் ரூபாய் தேவைப்படும்.

தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க போராடும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என்றாலும், நிதிப் பற்றாக்குறை மற்றும் தளபாட சிக்கல்கள் திட்டத்தை செயற்படுத்த தடையாக அமையும்.

இராணுவப் பயிற்சி அளிக்க இதுபோன்ற நிதியை முதலீடு செய்யும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை.

இவ்வாறு பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.