Header Ads



10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று திறப்பு – ஓமானில் இருந்து வந்த முதல் விமானம்


கொரோனா அச்சம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று -21- முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய விமான நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப் படுவதுடன், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, வணிக விமானங்களுக்காக மீண்டும் திறக்கப் பட்ட பின்னர் இலங்கைக்கு வந்த முதல் வணிக விமானம் இன்று காலை கட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 07.40 அளவில் ஒமானி லிருந்து வணிக விமானம் ஒன்று 50 பயணிகளுடன் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.