Header Ads



தினமும் 10 விமானங்களும், 750 இலங்கையர்களும் நாட்டுக்குள் வரலாம்


விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

14 நாட்கள் முடிந்த பிறகு, மூன்றாவது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனை முடிவில் எதிர்மறை முடிவு வரும் பட்சத்தில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுலாப்பயணிகளால் உள்ளூர் மக்களுக்குக் கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு பத்து விமானங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளது. நாட்டுக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு ஒரு விமானத்தில் 75 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு 750 இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் எந்த சோதனையும், தனிமைப்படுத்தலும் இல்லாமலே நாடு முழுக்க சுத்தினாங்களே ? ஒரு வேளை கள்ளத்தோணியில் வந்திருப்பாங்களோ ?

    ReplyDelete

Powered by Blogger.