Header Ads



புதிய வைரஸ் தொற்றை PCR சோதனையில்கூட உறுதிப்படுத்த முடியாது – விசேட வைத்திய நிபுணர் சுதத்


(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸானது எவ்வித அறிகுறிகளுமின்றி உடலில் எவ்வித மாற்றங்களையும் காண்பிக்காமல் ஆயிரக்கணக்கானோரிடம் பரவியுள்ளது. எனவே, தற்போது நபரொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பிசிஆர் பரிசோதனையின் ஊடாகக் கூட உறுதிப்படுத்த முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (26) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டில் ஆரம்பமான இரண்டாம் அலை இரு மாதங்களில் தீவிரமாக பரவலடைந்துள்ளது. எனினும் இதனை மேலும் கட்டுப்படுத்த மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும்.

இதன் வைரஸ் அதன் தன்மையை மாற்றி புதிய வகை வைரஸாக இங்கிலாந்தில் மாத்திரம் பரவலடையவில்லை. வேறு நாடுகளிலும் பரவலடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே இலங்கையில் கொவிட் வைரஸை முற்றாக ஒழிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

கொவிட்-19 வைரஸானாது எந்தவொரு அறிகுறிகளும் இன்றி ஆயிரக்கணக்கானோரிடம் பரவியுள்ளது. எனவே தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதன் எந்த வகை தொற்றியுள்ளது என்பதை அறிகுறிகள் மூலம் இனங்காண முடியாது.

அது மாத்திரமல்ல. நாம் வழமையாக முன்னெடுக்கும் பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாகக் கூட அதனை இனங்காண முடியாது. வைரஸின் உள்ளடம் யாதென இனங்கண்டால் மாத்திரமே கொவிட்-19 வைரஸா அல்லது புதிய வகை வைரஸா என்பதை கண்டறிய முடியும் என்றார்.

3 comments:

  1. Yenungaluku முஸ்லிம் yentral yenthaparisothanaium thevaiillathaanea

    ReplyDelete
  2. என்ன மாஃபியா இது?

    ReplyDelete
  3. தொற்றியவர்களுக்கு அறிகுறிகளும் இல்லை பாதிப்பும் இல்லை என்றால் ஏன் அதுபற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்?
    இப்போ விளங்குதுதானே இதன் பின்னால் உள்ள சர்வதேச பொருளாதார மாபியா?

    ReplyDelete

Powered by Blogger.