Header Ads



வவுனியாவில் ஜனாஸா எரிப்புக்கு, எதிராக போராட்டம் - தமிழ் Mp க்களும் பங்கேற்பு


கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின்  ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளைத்துணி கட்டும் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு  முன்பாக இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.  

வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், சுனாமி பேரவையில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

அடக்கம் என்பதே உலகநியதி, எரிப்போம் என்பதே உன் வியாதி, எரிக்காதே எரிக்காதே ஜனாஸாக்களை எரிக்காதே, மண்ணைவிட மருத்துவம் எதுவுண்டு, அடக்கம் செய்ய அனுமதி தா, போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத் மௌலவி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான ரசூல் லறீப், அப்பதுல் பாரி, பாயிஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மௌலவிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் வாழ் அனைத்து முஸ்லீம்கள் மற்றும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் களந்துகொண்ட அனைத்து முஸ்லீம்கள் எமது தமிழ் உறவுகள் எல்லோருக்கும் எனது அன்பான நன்றிகளும் உங்கள் எல்லோருக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காக துஆ பிரார்த்தனையும் செய்கின்றேன்.

    ReplyDelete
  2. இந்த ஒற்றுமைதான் நாங்கள் தொலைத்துவிட்டு நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருப்பது. சுயநல துரோகிகளின் நடவடிக்கைகளே எம்மை இந்த இழப்புக்கு ஆளாக்கியுள்ளது??????

    ReplyDelete

Powered by Blogger.