December 24, 2020

நுவரெலியாவில் தமிழ் உறவுகளினால், ஜனாசாக்களை அடக்கம்செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்களிலும் அமைதி போராட்டம் இடம்பெற்றது.

முதற்கட்டமாக மஸ்கெலியா நகரில் மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் அமைதி போராட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது “இலங்கை அரசே” கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பதாதைகளையும், வெள்ளை கொடிகளையும் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் அரசியலமைப்பின் படி எல்லா மதங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரததில் இந்த கொரோனாவால் மரணிக்கும் நபர்களுடைய சடலங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்குமான ஆலோசனையை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது

ஆனால் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் மத உரிமைக்கு அப்பால் அவர்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில், சகல தரப்பும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் கூட இதற்கு எதிர்பாகவும் ஆரப்பாட்டங்கள் நடந்துள்ளன. இது எதை குறிக்கின்றது என்றால் இந்த நாட்டில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் உட்பட நல்லிணக்கம் சமாதானம் நல்லுறவு போன்றவைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே சுமூக உறவில் விரிசல் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.

ஆகவே மலையக சமூகம் என்ற ரீதியில் இதற்கு பாரிய எதிர்ப்புகள் தெரிவிப்பதோடு அரசாங்கம் உடனடி தீர்வை எட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த பல தசாப்பதங்களாக சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் மலையக மக்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வந்திருக்கும் அதேவேளை ஏனைய சமூகங்களிலிருந்து இவர்கள் வேறுப்படுத்தி காட்டப்படும் பாராபட்சமான நிலை இந்த நாட்டில் காணப்படுகின்றது.

அதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் இன்னுமொரு சிறுபான்மை இன மான முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளுக்கு பாதிப்பு விளைவிப்பது இந்த நாட்டின் ஜனநாயக உரிமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே அரசு காலம் தாழ்த்தாது பாரபட்சமின்றி நடுநிலைமையோடு செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
8 கருத்துரைகள்:

எமது உறவுகளுக்கு நன்றி.

All communities should get together for the right in Sri Lanka. We are not isolated. Good people will join irrespective of the religion.

என்னுடைய ஆய்வுகளில் மலையக தமிழர் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் கலப்புத் திருமணம் தவிர்ந்த பண்பாடு சார்ந்த இன முறுகல் ஏதும் இல்லை. எதிர்கால இலங்கையில் நல்லுறவும் நல்லிணக்கமும் மட்டுமே தமிழ் பேசும் இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரே வழியாக உள்ளது.

Thank you all very much....

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய பங்காளிகள். தேசிய வருமானத்தின் முதுகெலும்பு இந்த மலையக மக்கள். அவர்கள் வாழ்வுமுறை,விருந்தோம்பல் எப்பவுமே தனி சிறப்பு.எனது நீண்ட நாள் ஆசை கனவுகளில் ஒன்று தான் மலையக பல்கலைக்கழகம் ஆனால் எல்லாம் தலைவர்களும் வரும் என்று சொல்லி வைத்த நிறைப்பி வசதியை பெருக்கியது தான் மிச்சம் இனி மலையகத்தை பிரநிதித்துவம் சேயும் அரசியல் வாதிகள் நீயா!நானா! போட்டியை விட்டு விட்டு நாம் செய்தோம் என்று முயற்ச்சி செய்து மார் தட்டி கொள்ளுங்கள் அடுத்த மலையக தலைமுறை உங்கள் வரலாறு போற்றும்.முஸ்லிம்கள் வாக்குகளில் பாராளுமன்றம் சென்று இன துரோகம் செய்த முஸ்லீம் அமைச்சர்களை விட நீங்கள் எவ்வளவோ மேல் நன்றி என் உடன் பிறவா சகோதர..சகோதரிகளே!

இவ்வாறான முயற்சிகள் பரஸ்பரம் எல்லா சமூகங்கள் மத்தியிலும் இடம்பெற வேண்டும். இது ஆட்சியாளர்களை நெறிப்படுத்த உதவும்...

United we can our rights. Divided.. they will forfeit all.

Post a comment