Header Ads



சீன மொழி அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது


கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது.

எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாக, அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கல்கிசை ரயில் நிலையத்தில், சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகை, கடந்த 2015ஆம் ஆண்டு, பொதுமுகாமையாளரின் ஒப்புதலின் அடிப்படையில் வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, கல்கிசைக்கு வரும் சீன சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாத்திரமே இந்தப் பலகை வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இப்பகுதியிலுள்ள ஹோட்டலொன்று, ரயில்வே நிலையத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது என்றும் தெரியந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. சிங்களம், தமிழ் உற்பட எல்லா மொழியிலான அறிவித்தல் பலகைகளும் தூக்கி எறியப்பட்டு அங்கு சீன மொழியிலான அறிவித்தல் மாத்திரம் இந்த நாட்டில் வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனேகமாக பூர்த்தியாகி விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.