Header Ads



நாட்டில் இல்லாத பிரச்சினைகளை அலி சப்ரி தோற்றுவிக்கின்றார், ஜனாதிபதியின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்துகின்றார் - மாகல்கந்தே தேரர்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார் என சிங்கள ராவயவின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்பது மாதகாலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யமுடிந்தது என்றால், இப்போது மாத்திரம் ஏன் இது பிரச்சினையாக இருக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற சர்ச்சையொன்று தற்போது உருவாகியிருக்கிறது. இந்நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் சடலங்களை அங்கிருந்து அகற்றும் வரையில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகியிருப்பதற்கு அவ்வைத்தியசாலையில் மருத்துவர் ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது.

ஏனெனில் சுகாதார நெருக்கடியொன்றின் போது அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சுகாதாரப் பணிப்பாளரிடமே காணப்படுகின்றது. அவர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களுக்கான இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காலி நீதிமன்றம் அந்த சடலங்களை பிரேத அறையிலேயே வைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் விளைவாக பிரேதப் பரிசோதனை வைத்தியர்களிதும் சிற்றூழியர்களினதும் சுகாதாரப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும். தற்போது இது சமூகத்தின் மத்தியில் வெகுவாகப் பரவிவிட்டது. சடலங்களைத் தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் இனவாதத்தை நோக்கித் தள்ளப்படலாம் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கின்றார்.

அவ்வாறெனின் இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி அவருக்கு சில விடயங்கள் தெரிந்திருக்கின்றன. நாட்டில் இல்லாத பிரச்சினைகளை அவர் தோற்றுவிக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. இறைவன் இந்த இனத்திற்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறனை கொடுக்க வேண்டும். முன்னோர்கள் முட்டாள்கள் என்று சொன்னாதில் எந்த பிழையும் இல்லை

    ReplyDelete
  2. PACHAI KUTHTHINA UDAMBAI
    MULUMAIYAAKA MARAITHA BIKKU.

    ReplyDelete
  3. இலங்கையில் கிறிஸ்தவ பாதிரிமார்கள், இந்து குருமார்கள், இஸ்லாமிய மௌலவிமார்கள் எவரும் அரசியலின் பக்கமே தலைவைத்துப் படுப்பது இல்லை. ஏனெனில் அவரவரகளுக்குரிய கடமைகளை அவரவர்கள் செய்யவே நேரம் இன்றி இருக்கின்றனர். ஆனால் பௌத்த தேரர்கள் மாத்திரம் அரசியலுக்குள் தம் மூக்கை நுழைத்து அரசையும் இயங்கவிடாமல் தடுத்து தாங்களும் எதற்காக சமயக் கல்வியைக் கற்றோமோ அதற்குரிய கடமைகளையும செய்யாமல் சிலசமயங்களில் அடாவடித்தனங்களை மேற்கொள்வதும் எமது நாட்டில் மட்டும்தான் காணப்படுகின்றது. உலகில் மிக முக்கியமாக பதது பௌத்த நாடுகள் இருக்கின்றன. அங்கு வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர் அங்குள்ள பௌத்த குருமார்கள் தங்களுடைய ஒழுக்கத்தைப் பேணி தமது மதம் சார்ந்த கடமைகளைச் செய்கின்றனர். சீனா, ஜப்பான், கம்போடியா, வியற்னாம், லாவோஸ், மங்கோலியா, தென் கொரியா, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை. இலங்கையில் மாத்திரம் இந்நிலைமை ஏற்பட்டு அரசியல் பிரளயங்கள் ஏன் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளியல் சமூக கலாசார கல்வி நடவடிக்கைகள் சரியாக அமைந்திருந்தால்த்தான் அந்நாடு உலகினரால் மதிக்கப்படும். தவிர எமது நாட்டில் எத்தனையோ அலங்கோலங்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன. அவற்றைக் கேட்பார் பார்ப்பார் யாரும் இல்லை. மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் காமக் களியாட்ட நிலையங்கள், கசினோ கிளப்கள், மதுசாரப் பண்ணைகள் என்பன காலம் காலமாக செயற்பட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டியதுதான் சமயக் குரவலர்களின் கடமைகள். இனிமேலாவது தகுந்த திட்டங்கள் தீட்டி இவற்றை எல்லாம் ஒழிக்க பௌத்த தேரர்கள் முன்வருவார்களா?

    ReplyDelete
  4. இவனைப்போல மடப்பேச்சு பேசுபவர்களின் பதிவை போட்டு இடத்தை வீணாக்காதீர்கள்.ஒருவரின் பேச்சின் சாராம்சத்தையே விளங்காத அறிவாளிதான் இவர்.

    ReplyDelete
  5. இந்த விஷமிகளால் பிரச்சினைகள் அதிகம். இவன் உண்மையான பௌத்தன் அல்ல. விமல் வீரவன்சவின் கூலிப்படை

    ReplyDelete
  6. இவனின் முகத்தைப் பார்த்தே இவனை அளந்து கொள்ள முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.