கம்பஹா - நீர்கொழும்பு, போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியின் முன்னால் அதிபர் ஷரீப்தீன் (SLPS) ஒய்வு பெற்றுக்கொண்டதன் காரணமாக, அல்பலாஹ்வின் புதிய அதிபர் பிரதி , உதவி அதிபர்கள் மற்றும், ஆசிரியர்கள் கொண்ட நிர்வாகக்குழுவினர்களோடு அல்பலாஹ்வின் வளர்ச்சியில் அயராது பங்களிப்புச் செய்யும் அல்பலாஹ் பழைய மாணவர்கள் (O B A) அமைப்பின் நிர்வாகக் குழு உருப்பினர்கள், கல்லுரியின் அபிவிருத்திச்சங்க உருப்பினர்கள் (SDEC) O G A ஆகியோர்கள் கல்லூரியின் புதிய கட்டிட பிரதான மண்டபத்தில் நடாத்திய பிரியாவிடை நிகழ்ச்சியின் போது அல் பலாஹ் பழய மாணவர் சங்க அமைப்பினால் பரிசில்வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டது.
மேலும் ஆசிரியர் குழுவினால் நிணைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன். பரிசில்களும் கவிகளும், வாழ்த்துப்பாடல்களும் பாடி கொளரவித்தார்கள். பழய மாணவியர்களினாலும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அதிபர் ஷரீப்தீன்(SLPS ) அவர்களது சேவை ஓய்வை அடுத்து அல்பலாஹ் கல்லூரியின் புதிய அதிபராக A.g.hasanul basary.(BSc,PGDE,SLPS) பொறுப்பேற்றார்கள்.
அல்பலாஹ்வின் புதிய அதிபர் கடமைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்வாகவும் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை உதவி அதிபர் அப்துல் காதர் ஆசிரியர் கோவிட் 19 பாதுகாப்புச் சட்ட திட்டங்களுக்கமைய ஏற்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
புதிய அதிபராக பொறுப்,பெற்றுக்கொண்ட ,A.G. ஹஸனுல் பஷரி (Bsc, PGDE,SLPS ) பம்பன்ன அல் கமர் மத்திய கல்லூரி, அரக்கியால முஸ்லிம் மாஹாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் அதிபராகவும் கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தமது சுருக்கமான உரையில், ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபருக்கு சுப சோபனம் கூறியவராக ஒரு சமூகத்தின் வெற்றி கல்வியிலேயே தங்கியிருப்பதனால் அல்பலாஹ் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டுக்கும் தன்னாலான சேவையை செய்யக் காத்திருப்பதாகவும். மாணவர்களும்,பெற்றோர்களும், நலன் விரும்பிகளும். அவரது நல்ல பல ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும், ஒழுக்கத்துடன் கொண்ட கல்வியைப் பெற்ற வருங்கால சந்ததிகளுக்கு சிறந்த வழிகாட்டலை உருவாக்கும் கல்விச்சாலையாக அல்பலாஹ்வை உருவாக்கிட அணைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோலை முன்வைத்தார்.
அல்பலாஹ்வில் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயர்தர,விஞ்சானபீட மாணவர்களுக்கான மேலதிக கற்றலுக்கான ஏற்பாடுகளையும் உரிய முறையில்,மேற்கொள்ள முயற்சிப்பதாகவும். தன்னை இக்கல்லூரிக்கு அழைத்து வரக்காரணமாகிய அல்பலாஹ் நலன் விரும்பிகளுக்கும். பழய மாணவர்களுக்கும் நன்றி கூறியவராக கல்லூரி ஆசிரியர் நிர்வாகம் சார்பாக முன்னால் அதிபருக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தடன் உதவி அதிபர் அப்துல் காதர் ஆசிரியர் அவரது நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தகவல்
M பாயிஸீன் (அல்பலாஹ் பழய மாணவர் சங்க ஊடகப் பிரிவு)
Posted in:
0 கருத்துரைகள்:
Post a comment