Header Ads



இலங்கை ஆட்சியாளர்களின் உறுதியானதும், சிறந்த தலைமைத்துவத்தினாலும் பின்வாங்கியது அமெரிக்கா


எம்சிசி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8960 கோடி ரூபா) கொடுப்பனவை ரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானிததுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய மில்லேனியம் சலெஞ்ச் கோர்பரேஷன் (எம்சிசி) பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 25 ஆம் திகதி வொஷிங்டன் டி.சி.நகரில் நடைபெற்ற எம்.பி.சி. பணிப்பாளர்கள் சபை கூட்டத்தின்போது மேற்படி கொடுப்பனவை இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையுடனான உடன்பாட்டுக்கு அமைய 5 வருட திட்டத்தின் கீழ் இந்நாட்டின் சில துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும நடவடிக்கைகளுக்காக குறித்த தொகையை வழங்க அமெரிக்க தீர்மானித்திருந்தது.

எனினும், இந்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீளாய்வுகளின்றி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்க இலங்கை அரசாங்கம் தீர்மனித்திருந்தது.

1 comment:

  1. அமெரிக்காவை வென்றுவிட்டோம், இனி நாம் தான் உலகில் முதல் வல்லரசு. எம்மைத் தோற்கடிக்க உலகில் யாரும் இல்லை. இனி சீனாவையும் ஒருகை பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.