Header Ads



மாகாண சபை முறைமையை நீக்குவது, நெருப்போடு விளையாடுவதற்கு சமமானது - மைத்திரிபால


மாகாண சபை முறைமையை நீக்குவது என்பது நெருப்போடு விளையாடுவதற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மாகாண சபை முறைமை என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட முறைமையாகும்.

இந்த முறைமையானது, தம்மைப் பொறுத்த வரைக்கும் அபிவிருத்தியை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 30 வருடகால இருந்த மாகாணசபை முறைமையை நீக்க முயற்சிப்பது இந்தியாவுடனான உறவை பாதிக்கும்.

இலங்கையில் ஆட்சி அமைக்கின்ற எந்தவொரு அரசாங்கமும் இந்தியா உடனான நட்புறவை பேண வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.

எனவே மாகாணசபை முறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அது இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஊடாக அதிகாரப்பகிர்வை வலுப்படுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போதும் வறுமைநிலை அதிக அளவில் இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மாகாண சபை முறையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

குறிப்பாக மாகாண சபைகளுக்கு ஒடுக்கப்படுகின்ற நிதியில் 25 சதவீதமானது மாத்திரமே அபிவிருத்திக்கான மூலதனமாக செலவிடப்படுகிறது

ஏனைய 75 சதவீதமான நிதி உறுப்பினர்களுக்கான மற்றும் மாகாண சபைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கான வேதனக் கொடுப்பனவு, கட்டணங்கள் போன்றவற்றுக்காக செலவாகின்றன.

இந்த நிலைமை மாற்றுவதற்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. மா. சபையை நீக்கி விட்டு முதுகில் மான்தோலைக் கட்டிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. அதிகாரத்தில் இருககும் போது தேவையானவர்களுடைய கருத்துக்களைக் கேட்கவோ அதற்கு மதிப்பளிக்கவோ இல்லை.தற்போது யாரும் கேட்காமலேயே கருத்துத் தெரிவிக்கின்றார். நாட்டின் பொதுச் சொத்து, இலஞ்சமாக எடுத்த ஆயிரமாயிரம் கோடிகள், வாகன இறக்குமதி செய்து வரியைக் கட்டாமல் விற்றுத் தேடிய கோடான கோடி பணம் எங்கே.அது உமக்குச் சொந்தமானவைஅல்ல. நாட்டு மக்களின் சொத்து என்பதை நினைவில வைதது அவற்றை திறைசேரிக்குத் திருப்பிக் கொடுத்தால் தப்பிக் கொள்ளலாம். இல்லையேல் நாளை அல்லது ஒருநாள் சிறையில வாடவும் அதற்கு மேலாக மறுமையில் அலலாஹ்வின் சரியான தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கவும்.

    ReplyDelete
  3. நீங்கள் நெருப்பு வைத்து விளையாடி விட்டிங்களே.. அதைவிடவுமா

    ReplyDelete

Powered by Blogger.