December 10, 2020

ஜனாஸா எரிப்பு - அடுத்த பரம்பரையினரில்கூட, இதன் பின் விளைவு இருந்து வரும் - ஹக்கீம்


நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். 

வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை (9) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் இறப்பதாக காரணம் காட்டி, மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையினால், அதற்கு தீர்வு காண்;பதற்காக நாங்கள் தொடர்ச்சியாக அந்த விவகாரத்தைக் கவனத்திற்கு கொண்டுவந்த வண்ணமே இருக்கின்றோம்.

பிரதமரின் அலுவலகமும் ஓர் அறிக்கையை விடுத்திருப்பது தெரியும். ஆனால், நாங்கள் இவ்விடயம் தொடர்பில் இப்பொழுது நம்பிக்கை இழந்து வருகின்றோம். 

இந்த விடயம் தீர்த்து வைக்கப்படாததனால், சமூகம் அதற்கு வேறு வகையில் முகம் கொடுக்க முன்வந்திருக்கின்றது. அவ்வாறான ஜனாஸாக்களை பொறுப்பேற்பதில்லை என்ற முடிவுக்கு சமூகத்தினர் வந்துவிட்டனர். 

இது முழுச் சமூகத்திற்குமே மிகவும் பாரதூரமான விடயமாக மாறிவிட்டது. 

அதனால் விளைந்துள்ள மனத் தாக்கம் ஒருபுறம் இருக்க, சர்வதேச மட்டத்திலும் இந்நாட்டிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்த விடயத்தினால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

அத்துடன், அடுத்த பரம்பரையினரில் கூட இதன் பின் விளைவு இருந்து வரும். 

ஆகையால், அரசாங்கத்தின் எரியூட்டுகின்ற இந்தக் கொள்கையை மீள் பரிசீலனை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

உங்கள் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், மருத்துவ நிபுணர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட இதுபற்றி தீர்மானம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவைக் கண்டிக்கின்றார். அவர் வைரஸ் நோய் தொற்று நிபுணர் மட்டுமல்லர். பக்டீரியா, கிருமித் தாக்கம் பற்றியும் கற்றுத் தேர்ந்தவர். 

அவர் பிரித்தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் உயர் பட்டங்களும், விருதுகளும் பெற்றவர். இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிந்தவர். அவர் இதில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வைரஸ் நோய் நிபுணர்கள் இல்லையென்றும், இது பற்றிய சகல விதமான விடயங்களையும் போதியளவு தெரிந்தவர்கள் இல்லையென்றும், உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இல்லையென்றும் அதில் நிபுணரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக் காட்டுகின்றார். அவர், இந்தத் துறையில் தகுதி வாய்ந்த பலர் இருக்கின்றோம். ஆனால், எவருமே இது சம்பந்தமான கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்கின்றார். 

தங்களை நிபுணர்கள் எனக் கூறிக் கொள்ளும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் யார்? விஞ்ஞானபூர்வமாக முற்றிலும் சரியானவை என உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றையும், நிரூபிக்கப்பட்டவற்றையும் மறுப்பதற்கு இவர்கள் யார்? 

விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகளை மறுப்பவர்கள் அவர்களுக்கேயுரிய ஒரு வித்தியாசமான உலகில் சஞ்சரிக்கின்றார்கள். 

அத்தகையவர்கள் தான் ஒரு சமூகத்தின் உணர்வுகளை வெகுவாக பாதிக்கின்ற எரிக்கின்ற விடயத்தில் எரிப்பதே ஒரே தீர்வு எனச் சொல்கின்றனர்.

டாக்;டர் பபா பலிஹவடன என்ற பிரபல தொற்றுவியல் நிபுணர் நல்லடக்கம் செய்ய முடியும் என்று கூறியிருக்கின்றார். 

டாக்டர் நிஹால் அபேசிங்ஹ என்ற மற்றுமொரு சிரேஷ்ட தொற்றுவியல் நிபுணரும் இவ்வாறான சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்றும், அதனை உலகம் சுகாதார நிறுவனம் அனுமதித்திருப்பதாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூடத் தோன்றி தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

இவ்வாறான தகைமை வாய்ந்த தொற்று நோய் நிபுணர்கள் வெளியில் இருக்க, தங்களை நிபுணர்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டு மாய உலகொன்றில் உலவுபவர்களே அக்குழுவில் இடம்பெற்று பாதகமான முடிவை எடுக்கின்றனர். 

அவர்களை அகற்றிவிட்டு, தகுதியான நிபுணர்களை இக்குழுவுக்கு நியமியுங்கள். எரிப்பு மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வுச் செய்யுங்கள் என இறைவனுக்காக மீண்டும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். 

அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறே மீண்டும் ஆதரவாக வாக்களித்து சமூகத்தை மேலும் அவமானம்படுத்திவிடக் கூடாது என்றார். 

6 கருத்துரைகள்:

Looks like the following are in the so-called experts committee.

1. Gnanasara Thero
2. Rathana Thero
3. Minister Wimal Weerawansa
4. M. Musammil MP.

Any idea who the other likely members are?

கட்சிக்கூட்டணி மாறி வாக்களித்த அரசியல் விபச்சாரிகளின் தலைவரின் கருத்துக்கள் பாதகமாகவே அமையும்

20 க்கு கட்சி வாக்களிக்க கட்சி உறுப்பினருக்கு அனுமதி அழித்து விட்டு அது சட்டமாகி சொந்த இணத்தின் பிறந்து வெறும் இருபது நாளான பச்சிளம் குழந்தை எரிந்து சாம்பலாகினத்துக்கு அப்புறம் முதலை கண்ணீர்!நீங்களும் உங்கள் கட்சி,மற்றும் உறுப்பினர்கள் எப்பவுமே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு தூரோகத்தை தவிர செய்தது ஒன்றும் இல்லை.ஆயிரம் ஆதவன் நடந்து வந்தான் மாதவன் மிதந்து வந்தான் சொல்லியே சொல்லியே மக்களை பைத்தியக்காரன் ஆகிவிட்டீர்கள்!கிழக்கு மகாண மக்கள் மற்றும் இன்னும் இந்த ஏமாற்று இரண்டு காங்கிரஸ் கட்சியை நம்பும் மக்களே!ஜப்னா முஸ்லீம் வாசகர்களாக இருக்கும் படித்த மேதைகள்,புத்திஜீவிகள், வைத்தியர்கள்,சட்டத்தரணிகள்,ஆசிரியர்கள் மற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழும் முஸ்லிம்களே!இனிவரும் காலங்களில் இந்த இருபதுக்கு வாக்களித்த அமைச்சர்கள் மரம் -மயில் கட்சிகளுக்கு இனிவரும் மாகாண சபை தேர்தலிலோ இல்லை எந்த தேர்தலிலோ நீங்கள் வாக்களித்தால்!நேற்று எரிந்து சாம்பலாகின அந்த பிஞ்சு குழந்தயின் மரணத்துக்கு நீங்களும் ஒரு காரணம் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

வாழ்த்துக்கள் ஐயா, முஸ்லீம்கள் ராஜபக்ஸ என்ற பெயர் கொண்ட சிங்கள பாமரன் ஒருவனையே வெறுப்பார்கள் அதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதனை எந்த முஸ்லீம் தலைவர்களாலும் குறுகிய எதிர்காலத்தில் மாற்றவே முடியாது. உலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயத்தில் முஸ்லிம்கள் விடாப்பிடியாக இருந்தால் ஏதாவது நியாயம் சொல்லலாம். இனவாதம் அன்றி எவ்விதத்திலும் நியாயம் சொல்ல முடியாது. ஒரே நேரத்தில் பலரால் செய்யப்படும் பிரார்த்தனைக்கு சக்தி உண்டு. உலகளவில் நேரம் குறிப்பிட்டு பிரார்த்தனை ஒன்று ஒழுங்கு செய்யப்படுமானால் சிறந்ததாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இவர்களின் மனங்களை எமக்கு சார்பாக மாற்றி வைத்து விடு அல்லது இவர்கள் இன ரீதியாக முடிவெடுத்திருந்தால் அவர்களின் மனங்களை பிறழச்செய்து விடு என்று பிரார்த்தனை செய்யலாம். ஒழுங்கு படுத்தப்படுவதனை அறிந்தாலே சிலருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு சட்டையைப் பிய்த்துக்கொண்டு பாதைக்கு வந்து விடலாம்.

அவர்கள் நிபுணர்கள் இல்லை என்பதால்தான் அவர்களைத் தகுதி கண்டுள்ளனர்.

I thought all our muslims politicians are in coma.
Shame on you all. Go to Hell

Post a comment