Header Ads



தகுதியில்லாதோர் தர்க்கித்தால்..?


- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -

சமூகம் என்பது, தனித்துவமான பண்பாடு, சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தை குறிக்கும். 

உலகைப் புரிந்துகொள்வதற்கு மனிதத் தொடர்புகளை பண்பியல் அடிப்படையில் (சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று சமூகவியலாளர் ரிச்சார்ட் ஜெங்கின்ஸ் குறிப்பிடுகிறார்.

ஒரு சமூகம் என்ற வரையறை மக்களுக்குத் தேவை என்பதையே மேற்படி கூற்றில் இருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது. 

கற்றோர், கல்லாதார் என்ற அனைத்து மட்டத்தவர்களையும் உள்ளடக்கியதாக ஒரு சமூகம் அமைவதால், அதன் நடவடிக்கைகளிலும் ஏற்றத் தாழ்வினைக் காணமுடியும். ஒருவரது சிந்தனை மற்றொருவருக்கு நிந்தனையாகவும், ஒருவரது கருத்து மற்றொருவருக்கு ஆத்திரமூட்டுவதாகவும் அமைவதுண்டு. 

மனிதர்கள் எப்படி ஏற்றத் தாழ்வாகப் படைக்கப்பட்டுள்ளனரோ, அதே போன்று அவர்களது சிந்தனை, பேச்சு, செயற்பாடு, தீர்மானம் என்பனவும் வித்தியாசமானவையாகவே இருக்கும்.

மனிதர்கள் நான்கு வகையினராவர்: முதலாமவர், தனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும்ளூ அவரே அறிஞராவார்ளூ அவரைப் பின்பற்றுங்கள். இரண்டாமவர், தனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியாதுளூ அவர் தூக்கத்தில் இருக்கிறார்ளூ அவரை விழிப்பூட்டுங்கள்ளூ மூன்றாமவர், தனக்குத் தெரியாது என்பதே அவருக்குத் தெரியாதுளூ அவர் வழிகாண்பிக்கப்பட வேண்டியவர்ளூ வழிகாட்டங்கள்ளூ நான்காமவர், தனக்குத் தெரியாது என்பதே அவருக்குத் தெரியாதவர்ளூ இவர் மடையனாவார்ளூ இவரை ஒதுக்கிவிடுங்கள்' என்று அரபு இலக்கியப் பெருந்தகை கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) என்ற மேதை குறிப்பிட்டதாக இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) தனது இஹ்யா உலூமித்தீன் எனும் கிரந்தத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

கருத்துச் சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது என்ற அடிப்படையில், சில போது தமது கருத்து என்ன அடிப்படையிலானது என்பது கூடத் தெரியாத பலரும் தமது கருத்துக்களை முன்வைப்பர்ளூ எனினும் அவை அறியாமை நிறைந்தவையாக அமையலாம். சில போது, ஒரு பெரும் சிந்தனையாளரை மிஞ்சியவையாகவும் அமையலாம். எப்படி இருப்பினும், அறியாமை மிகுந்த ஒருவருடன், தெளிவுள்ள ஒருவர் வீணாக தர்க்கம் செய்வதை அல்லாஹ் விரும்பவில்லை. அதன் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் வழிகாட்டியுள்ளான். இன்று சமூகவலைத்தளங்களில் கருத்துச் சொல்லும் அல்லது பின்னூட்டமிடும் ஒவ்வொருவரும் தாம் ஒரு பேராசான்ளூ தத்துவவித்தகர் என்ற எண்ணத்திலேயே கருத்திடுவர். எனினும், அது அவரது அறியாமையை படம்பிடித்துக் காண்பித்துவிடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லிம் பின்வரும் அல்லாஹ்வின் அருமையான வழிகாட்டலை மாத்திரம் எடுத்து ஒழுகினால், அது அவரது ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் ஏன் அவரது மானத்திற்கும் கூடப் பாதுகாப்பாக அமைந்துவிடும்.

இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்ளூ பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள்ளூ மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் 'ஸலாமுன்' என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.                    (அல் புர்கான் : 63).

அறிவீனர்களுடன் தர்க்கத்து தமது பெறுமதியான நேரங்களை வீணடிக்காது, அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்துவிடுவார்கள்ளூ அவர்களே, ரஹ்மானுடைய அடியார்கள் என்ற பெரும் பேற்றைப் பெற்றவர்கள் என்று பெரும்பாலான தஃப்ஸீர் விளக்கவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அறியாமையில் கருத்துச் சொன்னவருக்கு அதே அறியாமையின் அடிப்படையில் கருத்துச் சொல்லாது, மிருதுவான முறையில் கருத்துச் சொல்வது இஸ்லாமிய பண்பு மற்றும் பரிபூரணத்துவமான நாகரிகம் என்பதற்கான அடையாளமாகும். அதே அறியாமையின் அடியில் பதிலளிப்பதானது மற்றுமோர் அறிவீனத்தின் அடையாளமாகும். 

தங்களுடன் அறியாமையாக தர்க்கிப்போர்களுடன் மனிதர்கள் நான்கு வகையாக நடந்துகொள்வர்; :

அறியாமையில் தர்க்கிக்கும் ஒருவருடன், அதனை விடவும் சற்று அதிகமான அறியாமையுடன் நடந்து கொள்ளல்ளூ இது மிகவும் மோசமான பண்பாகும்ளூ இது நயவஞ்சகர்களின் அடையாளமாகும். ஒரு முஸ்லிம் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார். 

அதே அளவிலான அறியாமையுடன் நடந்துகொள்ளல்ளூ இதுவும் மேற்சொன்ன அல்லாஹ்வின் போதனைக்கு மாற்றமானதாகும்.

அறியாமையில் தர்க்கிக்கும் ஒருவருக்கு எந்த பதிலும் அளிக்காது, மௌனமாக இருத்தல். இது நிதானம், சகிப்பு, பொறுமை போன்ற மேலான குணங்களின் அடையாளமாகும். மௌனமாக இருக்கும் காலமெல்லாம் ஒரு வானவர் பதிலளித்துக்கொண்டே இருப்பார்ளூ பதிலளிக்க முற்பட்டால் அவ்விடத்தே ஷைத்தான வருகை தந்துவிடுவான். 

அறியாமையை உபகாரத்தினைக் கொண்டு முகம்கொடுத்தல்ளூ இதுவே மிகவும் பரிபூரணமான பண்பாகும். அவருக்காக பாவமன்னிப்புக்காக துஆச் செய்தல்ளூ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒருவர் கடுமையாக திட்டிய போது, 'யா அல்லாஹ் அவர் உண்மையாளராக இருந்தால் என்னை மன்னிப்பாயாக! அவர் பொய்யராக இருப்பின் அவரை மன்னிப்பாயாக!' என்று துஆச் செய்தார்கள். இதுவே அல்லாஹ் விரும்பும் ஒரு முஸ்லிமின் பண்பாகம். 

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள்.                                 (அல் புஸ்ஸிலத் : 34).

எம்முடன் ஒருவர் நேரடியாக அல்லது மறைமுகமாக முறையற்ற வகையில் சமூகவலைத்தளங்களில், தர்க்கித்தால் எமது நாகரிகமான பண்பாடுகள் மூலமாக அவரை அனுகி, எமது ஒழுக்க விழுமியத்தினை கற்றுக்கொடுக்கும் அறிவாளிகளாக செயற்பட வேண்டும். மாறாக தகுதி தரம் பாராது அனைவருடனும் ஒரே விதமாக நடந்துகொள்ளல் எம்மைப் பாவத்தில் கொண்டு சேர்த்துவிடும்ளூ எமது இஸ்லாமும் கேள்விக்குறியாகிவிடும். 

No comments

Powered by Blogger.