Header Ads



உலகில் மிக அதிகமாக விலங்குகளை படுகொலை செய்யும், நாடாக இலங்கையின் பெயர் பதிவுப்பெறும் - சோபித தேரர் வேதனை


அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் கட்டுநாயக்கவில் ஒரு பாரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளமை, நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது

தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

உலகின் இறைச்சி உற்பத்தியில் சுமார் 10 வீதப்பங்கை இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை பூர்த்தி செய்ய முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனினும் இது யாருடைய தொழிற்சாலை என்பதை அறிந்து கொள்வதற்கு நாட்டின் பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த தொழிற்சாலையை நிறுவுவதன் நோக்கம் என்ன என்றும் அவர் வினவியுள்ளார்.

இந்த விடயத்தில் நாட்டிற்கு ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை தாக்கத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விலங்குகளை அறுக்கும் செயற்பாட்டின் மூலம் நாடு அவமானத்தை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை அவமானமான பல உலக சாதனைகளை கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான தனி ஆட்கள் மதுபானம் நுகரும் நாடு, அதிக அளவு நச்சுகளை உட்கொள்ளும் நாடு மற்றும் குறைந்த கூலிகளுடனான தொழிலாளர்களை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு பதிவுகள் உள்ளன.

இந்தநிலையில் கட்டுநாயக்க இறைச்சி பதப்படும் தொழிற்சாலையின் மூலம் உலகில் மிக அதிகமாக விலங்குகளை படுகொலை செய்யும் நாடாக இலங்கையின் பெயர் பதிவுப்பெறும் என்று சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கப்பட்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. எனினும் அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் ஒருசில செல்வாக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சோபித தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

3 comments:

  1. இங்கே ஒரு விடையத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
    எமது நாட்டைப் பொறுத்தவரையில் எமது நாடு கருணையுள்ள நாடு, மிருக வதைக்கு எதிரான நாடு, பசுவதைக்கு எதிரான நாடு பௌத்த தர்மத்தை பேனும் நாடு என்றெல்லாம் கூறிக்கொண்டு எங்கெல்லாம் முஸ்லிம்கள் இறைச்சியை உணவாக பெர விரும்பும்போது அவர்களின் அந்த கருனண வெளிவருகிறது . ஆனால் ஏற்றுமதிக்காக பசுக்களையும் ஆடுகளையும் கொள்ளும்போது அது கருணையுள்ள செயல் நாட்டுப்பற்றுள்ள செயல்

    ReplyDelete
  2. Maadu mattum thaan uyirinam meen,koli ellam thaavaramo

    ReplyDelete

Powered by Blogger.