வேயங்கொட மாலிகாதென்ன பிரதேசத்தில் நபர் ஒருவரின் கை, கால்கள் வெட்டி கொண்டு சென்றமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், 20ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக வேயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய ஆலோசனைக்கமைய பேலியகொட மற்றும் கம்பஹா விசேட பொலிஸ் பிரிவினால் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கால் ஒன்றை அவதானித்த பிரதேச மக்கள் அதனை பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கால் வத்துபிட்டவல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கால் மற்றும் கைகள் வெட்டிய குற்றச்சாட்டிற்கு தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a comment