Header Ads



உடல்களை எரிப்பதா, அடக்குவதா விடயத்தில் பௌத்த மதத் தலைவர்கள் அவசரப்பட தேவையில்லை - வாசு


(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற விடயத்தில் மதத் தலைவர்கள் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. இவ்விடயத்தில் அவர்கள் கூறுவதை விட மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு அதற்கேற்ப செயற்படுவதே பொறுத்தமானதாக இருக்கும் என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்விடயம் தொடர்பில் கேட்ட போது இதனைக் கூறிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

கேள்வி : பௌத்த மதத் தலைவர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று கூறுகின்றார்களே?

பதில் : மதத் தலைவர்கள் கட்சி தலைவர்கள் அல்ல.

கேள்வி : கொவிட் மரணங்கள் தொடர்பில் தகனம் செய்வதா அடக்கம் செய்வதா என அரசாங்கத்திற்கு எதிராக மதத் தலைவர்களால் கடுமையான எதிர்ப்பு வெளியாகின்றதே ?

பதில் : இல்லை. அவ்வாறு எதுவும் இல்லை. தகனம் அல்லது அடக்கம் தொடர்பில் பௌத்த மதத் தலைவர் இவ்வளவு அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் மருத்துவர்கள் கூறும் விடயமே முக்கியத்துவமுடையதாகும். அதற்கமையவே செயற்பட முடியும்.

கேள்வி : எனினும் அவர்கள் தம்மால் தான் இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுகின்றார்களே ?

பதில் : இந்த விடயத்தில் மதத் தலைவர்கள் கூறுவதை விட மருத்துவர்கள் கூறுவதை கேட்பதே பொறுத்தமானமதாக இருக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.