Header Ads



முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது, பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் - மிலிந்த கவலை


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தாய்நாட்டில் அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானம் குறித்து அரசாங்கத்திற்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) கூட முஸ்லிம்களின் இறுதி சடங்குகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என அறிவித்துள்ளதோடு, தீவிரவாத சிந்தனையில் இருந்து வெளியேறி அறிவார்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு காணப்படுவதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரும் அறிவுறுத்தயுள்ளார்.

"சந்தர்ப்பவாத அரசியல் எதிர்ப்பு களையப்பட்டு, ஒரு நேர்மறையான சமூக சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு பயிற்சியாக இது மாற்றப்பட வேண்டும்" என முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

"அனைத்து மத மற்றும் தேசிய பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளிப்போம்" என்ற தலைப்பில் கொழும்பு சிங்கள் பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதிய பத்தியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக முஸ்லிம்கள் இறந்தால் அவர்களின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து வலுவான விவாதம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமூக கலாச்சாரங்களுக்கு மரியாதை உள்ள உயர் சமூகமாக நடுநிலை தீர்வை எட்டுவது பொருத்தமானது என வலியுறுத்தியுள்ளார்.

அயல் வீட்டாரின் மரணத்தை நல்லிணக்கத்திற்கான முதல் படியாக மாற்ற முன்மொழிந்துள்ள இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, வைரஸால் ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு உடலை தகனம் செய்வதற்கான தீர்மானமானது, முஸ்லிம்களின் நம்பிக்கைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எதிர்காலத்தில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

”சக்தி உதவியற்றது, ஆனால் பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இது வெறுப்பாக இருக்கக்கூடும்."

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய உலகின் பிற நாடுகள் அனுமதித்துள்ளதாக எனவும், சுட்டிக்காட்டியுள்ள அவர், மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் தடை விதிக்கப்படுவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

3 comments:

  1. முஸ்லிம்கள் எந்த விடயங்களில் விட்டுககொடுப்புச் செய்வார்கள் எந்த விடயங்களில் எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதனை அவர்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் உலக மட்டத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை கூர்ந்து அவதானிக்கும் புத்திசாலிகளின் அறிக்கை இவ்வாறு தான் அமையும். அமைச்சர் அலி சப்ரி அவர்களின் இறுதி அறிக்கையும் இதற்கு சமாந்திரமானதே. உலக பயங்கரவாத அமைப்புகளிற்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுக்கும் கைங்கரியமாக அமையலாம் என எதிர்வு கூறுகின்றார்கள்.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் அவசரப்படுபவர்கள் அல்ல. இஸ்லாம் அவர்களை மிக அழகாகப் பயிற்றுவித்துள்ளது. அவர்கள் எப்போதும் சமாதானம் சகிப்புத் தன்மைகளுக்குப் பேர்போனவர்கள். பொறுமைசாலிகள் ஆனால் கோழைகள் அல்லர் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன...எனவே பொறுமைக்கு இன்னும் அவகாசம் உள்ளது. இதில் நிச்சயமான தோல்வி இனவாதத்துக்கே என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

    ReplyDelete
  3. மிலிந்த மொரகொட ஐயா அவரகள் முன்பு ஒரு பிரபல அமைச்சராக இருந்து பல சேவைகளை நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் செய்த ஒரு மதிப்புமிக்க பெரும் புத்திஜீவி ஆவார் நன்கு கற்றுணர்ந்த மேதை. அவரகள் கொவிட் எரிப்பு மிகவும் பிழையானது பிரச்சினைக்குரிய விடயம் என்று தெளிவுபடுத்தினால் அதற்கு மாற்றுக் கருத்து எந்தவிதத்திலும் இருககவே முடியாது. அரசில் இருந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஆணித்தரமான எதிர்ப்பினை வெளியிடும் ஒரு மேதையாக அன்னார் இருப்பது உண்மையிலேயே முஸ்லிம்கள் பெற்றுள்ள மதிப்பாகும். எமது முதுகில் குத்திய எமது பாராளுமன்ற உறுப்பினர்களைவிட இந்த ஐயா மிகவும் உயர்வானவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.