December 19, 2020

ஈஸ்டர் தாக்குதலையடுத்து மிக கடின சூழ்நிலையிலும் அமைதியாக செயற்பட்டு உலகின் பாராட்டை பெற்றோம் - பிரதமர்


நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார். 

இவ்வாறான கடினமான காலப்பகுதியிலேயே பக்தி, அன்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வு என்பன நாட்டிற்கு அவசியமாகிறது. மதத்தின் வழியே வாழும் சமூகமொன்றை உருவாக்குவதற்கு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு ஒருபோதும் தயங்காது என்றும் குறிப்பிட்டார். 

அங்கு உரையாற்றி பிரதமரின் முழுமையான உரையில், இதற்கு முன்னர் அரச நத்தார் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மன்னார் போன்ற நகரங்களை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. எனினும், இம்முறை நத்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுகின்றோம். 

இன்று முகக்கவசம் அணிவது காரணமாக அயலவர்களுடன் புன்னகைப்பதற்கேனும் வாய்ப்பின்றியுள்ளது. அந்த வெளி நிகழ்வுகள் இல்லாத போதிலும், எவ்வாறான தடைகள் காணப்படினும், பிரச்சினைகள் இருப்பினும் அயலவர்கள் மீது உங்களது இதயத்தில் உள்ள அன்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை நான் அறிவேன். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின் போதே கத்தோலிக்கர்களாகிய உங்களுக்குள் காணப்படும் பக்தி, அன்பு மற்றும்நம்பிக்கை உணர்வு என்பன இந்நாட்டிற்கு முக்கியமானதாக அமைகின்றது. 

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர். அதாவது 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உங்களது பல முக்கியமான தேவாலயங்கள் போன்று கொழும்பின் முன்னணி ஹோட்டல்கள் மூன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500இற்கும் அதிகமானோர் காணமடைந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்காக தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்களாவர். இது ஆசியாவில் மாத்திரமின்றி, சர்வதேச மட்டத்திலும் சிவில் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலாகும்.  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய அனைவரும் அமைதியா செயற்பட்டு உலகின் பாராட்டை பெற்றோம். 

வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார். கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முழுமையாக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமாறு நான் அறிவுறுத்தினேன். அதேபோன்று தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம். 

கடந்த வாரம் 2020.12.16 பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்! 

2 கருத்துரைகள்:

​வெறுப்பு வெறுப்பைத் தணிக்காது,ஆனால்,பற்றி எரிக்கும் முஸ்லிம் உடல்களுக்கு நியாயம் கேட்கும் முஸ்லிம்களின் நியாயமான குரல் அரசுக்கும் அரசாஙகத்துக்கும் கேட்கின்றதா. கேவலம்,இந்த அரசியலைக் காண எமது எதிர்கால சமுகத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் இடமளிக்கக்கூடாது. அமைதியான சமாதானமான வழிகளில் இலஙகையில் நியாயத்தை உறுதிப்படுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

Mr. Prime Minister, you have expressed your profound appreciation for the Tolerance, Restraint, Patience and other Humane qualities displayed by the Christians in the aftermath of the Terror attacks on the Easter 2019.

How about the Sinhala Buddhist leadership following the example set by the Christians, and display some tolerance and respect for the Minorities in this country, instead of the Disgusting Hatred, Brutal Violence and Never Ending Discrimination Unleashed by Sinhala Buddhist Mobs Encouraged by Govts and Power Hungry Politicians, especially from your plank?

Post a comment