Header Ads



'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது


கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக எடுத்துக் கொள்ளப்பட்ட மனுக்களை மேற்கொண்டு விசாரிக்காமல் தள்ளுபடி செய்து, தீர்ப்பளித்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த மனு சார்பாக இவ்வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

"கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்கள் அனைத்தும் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவரவர் சமய முறைப்படி இறுதிக்கிரிகைகள் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எமது தரப்பு வாதங்களை மிகவும் உருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்து சமர்ப்பணங்களை செய்திருந்தோம். எமக்கு பக்கபலமாக மாற்று மத சட்ட வல்லுனர்களான எம்.ஏ.சுமந்திரன், விரான் கொரயா மற்றும் தவராசா போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணங்களை செய்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எவ்வாறாயினும் நாம் எதிர்ப்பார்த்த சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனமை எமக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தீர்ப்பு கிடைத்திருக்கின்ற இன்றைய தினத்தை ஒரு துக்ககரமான நாளாகவே கொள்ள வேண்டியுள்ளது.

எமது மனுக்களை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பான வாதங்களும் சுகாதார அமைச்சு சார்பான சட்டமா அதிபர் திணைக்கள வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பால் எமது மனுக்களை மேற்கொண்டு விசாரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என்று ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு சாதகமான தீர்ப்பாக அமையும் என மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு எதிர்மறையாக கிடைத்திருப்பதனால் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறாக அமையும் என்று அவரிடம் கேட்டபோது;   

உச்ச நீதிமன்றத்தை விட மேலானது எதுவுமில்லை என்பதனால் அத்தீர்ப்பினை நாம் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆகையினால் ஜனாஸா அடக்கம் தொடர்பில் இனி அரசியல் ரீதியான தீர்வினையே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)


11 comments:

  1. இதுவும் அரசியல் தீர்வுதான்?

    ReplyDelete
  2. நிசார் காரியப்பரே..
    20 ஆம் சட்டத்துக்கு வாக்களித்தது உங்கள் கட்சி துரோகிகள் தானே விசாரணை குழு அமைத்து உங்க கட்சி பேய் கட்டினார்கள் என்னாச்சு?நீங்க தானே கட்சியின் செயலாளர்?உங்களுக்கு அவர்களின் சட்டையை பிடித்து ஏன் இப்படி ஒரு வரலாறு துரோகம் செய்தீர்கள் என்று கேட்க முடியுமா?பிள்ளையையும் கிள்ளி விட்டு இப்ப தொட்டிலையும் ஆட்டுரிங்க.

    ReplyDelete
  3. Political in high court tooo, No justice anymore....Shame Shame!!!

    ReplyDelete
  4. What political Solution? Isn't this judgement Political?

    How about taking this Matter to International Institutions like the UN, International Court of Justice etc.?

    ReplyDelete
  5. انا لله وإنا اليه راجعون

    ReplyDelete
  6. இப்ப ஜனாசாவைத்தான் எரிக்கிறானுவல் இன்னங் கொஞ்சம் நாளானால் முஸ்லிம்களை உயிரோடு எரிப்பானுவல். அப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் பார்ப்போம் உங்கள் அரசியல் தீர்வு எவ்வாறு அமையப் போகிறதென்று. நாங்கள் சொல்கிறோம் அல்லாஹ்வின் தீர்ப்பை தவிர யாராலும் ஒன்றும் கழட்ட முடியாது.

    ReplyDelete
  7. நம் நாட்டில் ஜனாசா எரிப்பு முதல், முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முதன்மைக் காரணம் இனவாதக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசுமே ஆகும்.நடந்த முடிந்த தேர்தலோடு இக்கட்சிகளை புறக்கணிக்காததின் பலனைத்தான் இலங்கை முஸ்லிம்களான நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.எதிர்காலத்தில் இன்நாட்டில் நாம் நிம்மதியாக வாழவேண்டுமாயின் இனவாதக் கட்சிகள் கலைக்கப்படல் வேண்டும்.காக்காமார் வீட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும்.முஸ்லிம்கள் தேசிய கட்சிகளுக்கு நேரடி ஆதரவு வழங்க வேண்டும்

    ReplyDelete
  8. சிலர் கழுதைகளை விட மோசமாக யோசிக்கிறார் இனவாத கச்சி உருவாக்கினதால்தான் இப்படி என்று, இப்ப உன்ன எரிப்பதா புதைப்பதா என்பதைக்கூட தெரியாம முடிவெடுப்பார்கள், நீ எல்லாத்துக்கும் உண்ணப்பத்தியே உனக்கு தெரியாம இருக்கும். வழக்கு போட்டு இனவாதம் தலைதூக்கியதால் தொற்று போகலாம், ஒருநாள் உண்மை வெல்லும், உன்னைப்போல கழுதைகளும் சுயநலம் நிறைந்த ஓநாய் களால்தான் இவ்வளவு பிரச்சினை ஒற்றுமையாக இருந்து முடிவு எடுத்து இருந்த வெட்டி நிச்சயம்

    ReplyDelete
  9. @Abdul SLPP also racist according to their activities and also UNP and SLFP also some extent they neglected minorities. Not only in parliament but in the court also they have 2/3 majority so Justice denied to minorities in Sri lanka.

    ReplyDelete
  10. Corrupted & selfish Political system rooted in
    Sri Lanka through uncultured & uncivilized & uneducated political parties & members without knowledge of respecting multicultural people's life styles in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.