Header Ads



அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும்..!!


இது நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை கொண்டாடும் காலமாகும். எனவே அவர்களுடன் நமது சகோதரத்துவ உறவை புதுப்பிக்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். ஆகவே, தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ  தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுடன் உங்கள் நட்யை மேம்படுத்த இந்த வாய்பை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம். 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியை தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ  தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுக்கு அனுப்புவதுடன் நட்புணர்வோடு அவர்களுடன் பரிசுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


ஏ.பி. எம். அஷ்ரப்

பணிப்பாளர்

வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம்.

6 comments:

  1. கிறிஸ்து பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில் எனக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றது.

    முதலாவது : கிறிஸ்தவர்கள், அவர்களது நம்பிக்கையின் பிரகாரமோ அல்லது கலாச்சாரப் பண்டிகையின் பெயராலோ 'ஈஸா عليه السلام அவர்கள் இன்றைய தினம் தான் கடவுளின் குமாரராக பூமியில் அவதரித்தார்' என்னும் அவர்களின் கூற்றை ஒப்புக் கொண்டு அல்லது உள்ளத்தாலும் நம்பிக்கையாலும் முரண்பட்ட நிலையில் வெறுமனே வாயினால் வாழ்த்துக் கூறி அவர்களது அன்பையும் நட்பையும் பரிவையும் சம்பாதித்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறும் அபாண்டத்துக்கு வாழ்த்துக் கூறிய பாவத்தைச் சுமப்பது.

    இரண்டாவது : நீங்கள் நினைக்கும் பிரகாரம்
    "(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்."
    என்கிற, வேதத்தின் செய்தியைச் சொல்லி அவர்களது அபாண்டத்தினால் அவர்கள் நிரந்தரமாக அனுபவிக்க இருக்கும் வேதனையைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பது.

    மூன்றாவது : இது பற்றிய அறிவுள்ள நான் அன்றாடம் சந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கு -
    "(இதனால்) வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்துவிடவும் கூடும். (அவ்வளவு பெரிய அபாண்டத்தை நீங்கள் கூறுகின்றீர்கள்." என்னும் இறைவனின் எச்சரிக்கையைச் சொல்லாமல் மௌனம் காப்பதின் மூலம் எனக்கும் அவர்களுக்கும் அநியாயம் இழைத்துக் கொள்வது.

    இதில் மிகச்சிறந்த தெரிவாக இரண்டாவதை இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் இறக்கப்பட்ட வேதத்தின் செய்திகளைக் கொண்டே வாழ்த்துக் கூற விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. என்ன செய்தி இணைக்கப்பட்டுள்ளது.................

    ReplyDelete
  3. Allhvin meethu apaandamaha palisumathiya maatham,
    Satru sinthithu arivurai koorungal

    ReplyDelete
  4. ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் நிபந்தனையின்றி வாழ்த்துக்கூறுவதும், நட்புணர்வுடன் நடந்து கொள்வதுமே சிறந்த மார்க்கத்தின் பண்பாக இருக்க முடியும்.

    ReplyDelete
  5. Nauoothu billahi minha, ashthaqfirullah

    ReplyDelete

Powered by Blogger.